பித்ரகுண்டா-சென்னை இடையே சிறப்பு ரயில்

பித்ரகுண்டா-சென்னை சென்ட்ரல் இடையே வாரத்தில் 5 நாள்கள் மெமு (நெடுந்தொலைவு மின்சார ரயில்) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பித்ரகுண்டா-சென்னை சென்ட்ரல் இடையே வாரத்தில் 5 நாள்கள் மெமு (நெடுந்தொலைவு மின்சார ரயில்) சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

பித்ரகுண்டாவில் இருந்து வாரத்தில் 5 நாள்கள் (திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமை) அதிகாலை 4.45 மணிக்கு மெமு சிறப்பு ரயில் (07237) புறப்பட்டு அதேநாள் காலை 9.05 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து வாரத்தில் 5 நாள்கள் (திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மெமு சிறப்பு ரயில்(07238) புறப்பட்டு, அதேநாள் இரவு 8.45 மணிக்கு பித்ரகுண்டாவை அடையும். இருமாா்க்கமாக, இந்த ரயிலின் சேவை ஏப்.1-ஆம் தேதி தொடங்கவுள்ளது. இந்தச் சிறப்பு ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தொடங்கிவிட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com