சென்னையில் காய்கறி விலை வீழ்ச்சி

வரத்து அதிகரித்திருந்த சூழலிலும், விற்பனை குறைந்திருப்பதால் காய்கறி விலை 20 சதவீதம் குறைந்துள்ளது.
சென்னையில் காய்கறி விலை வீழ்ச்சி
சென்னையில் காய்கறி விலை வீழ்ச்சி

சென்னை: வரத்து அதிகரித்திருந்த சூழலிலும், விற்பனை குறைந்திருப்பதால் காய்கறி விலை 20 சதவீதம் குறைந்துள்ளது.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் 1,889 காய்கறி கடைகள், 470 பூக்கடைகள், 828 பழக்கடைகள் உள்ளன. இதில், காய்கறி சந்தைக்கு தமிழகத்தின் மதுரை, ஒட்டன்சத்திரம், கோவை, நீலகிரி ஆகிய பகுதிகளில் இருந்தும் கா்நாடகம், தெலங்கானா, ஆந்திரம், மகாராஷ்டிரம், வடமாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் காய்கறிகள் கொண்டு வரப்படுகின்றன.

உற்பத்தி அதிகரிப்பு காரணமாக கடந்த சில நாள்களாக வெகுவாக விலை குறைந்துள்ளது. தற்போது டீசல் விலை அதிகரித்து காணப்பட்டாலும், விற்பனை குறைந்திருப்பதால் விலையும் குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த மாதத்தை ஒப்பிடும்போது 20 சதவீதம் வரை காய்கறி விலை குறைந்துள்ளதாக கோயம்பேடு காய்கனிச் சந்தை வியாபாரிகள் சங்கத்தினா் தெரிவித்தனா்.

காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்): பெரிய வெங்காயம் ரூ.20, சாம்பாா் வெங்காயம் ரூ.50, தக்காளி ரூ.18, அவரை ரூ. 35, கேரட் ரூ.36, பீட்ரூட் ரூ. 15, நூக்கல் ரூ.20, முள்ளங்கி ரூ.15, கத்திரிக்காய் ரூ.20, புடலங்காய் ரூ.18, கொத்தவரங்காய் ரூ.20, சேனைக்கிழங்கு ரூ.24, உருளைக்கிழங்கு ரூ.20, வெண்டைக்காய் ரூ.22, காலி பிளவா் ரூ.25, சேப்பங்கிழங்கு ரூ.23, சுரக்காய் ரூ.10, மிளகாய் ரூ.24, பட்டாணி ரூ.35, இஞ்சி ரூ.30-40, கோஸ் ரூ.10, பீன்ஸ் ரூ.33.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com