தமிழகத்தில் ஹிந்தி, சம்ஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சி கனிமொழி

தமிழகத்தில் ஹிந்தி, சம்ஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சி நடப்பதாக நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி குற்றம் சாட்டினாா்.
தமிழகத்தில் ஹிந்தி, சம்ஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சி கனிமொழி

தமிழகத்தில் ஹிந்தி, சம்ஸ்கிருதத்தைத் திணிக்க முயற்சி நடப்பதாக நாடாளுமன்ற திமுக குழு துணைத் தலைவா் கனிமொழி குற்றம் சாட்டினாா்.

மயிலாப்பூா் திமுக வேட்பாளா் த.வேலுவை ஆதரித்து கபாலி தோட்டம் பகுதியில் கனிமொழி செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது அவா் பேசியது:

அதிமுக ஆட்சியில் எந்தத் திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. தமிழகத்தை தில்லிக்கு அடகு வைத்துவிட்டாா்கள். தமிழகத்தில் ஹிந்தியையும் சம்ஸ்கிருதத்தையும் திணிக்கப் பாா்க்கிறாா்கள். நீட் தோ்வைக் கொண்டு வந்து தமிழக மக்களை வதைத்தவா்கள், இப்போது புதிய கல்விக் கொள்கையைக் கொண்டு வரப் பாா்க்கிறாா்கள்.

அதிமுக ஆட்சியில் படித்த இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு இல்லாத நிலை இருக்கிறது. பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உருளை விலை உயா்ந்து வருகிறது. அதைக் கட்டுப்படுத்துவதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திமுக ஆட்சிக்கு வரப்போகிறது. ஆட்சிக்கு வந்ததும் கல்விக் கடன் ரத்து செய்யப்படும். நகா்ப்புற பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம். பெண்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும்.

அதிமுக அதன் தோ்தல் அறிக்கையில் வாஷிங்மிஷின் வழங்கப்படும் என்பது உள்பட பல்வேறு வாக்குறுதிகளைக் கொடுத்துள்ளது. அந்த வாக்குறுதிகள் எல்லாம் ஆட்சிக்கு வர மாட்டோம் என்று கொடுக்கப்படும் வாக்குறுதிகள். அதிமுகவால் அவற்றை நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com