சென்னையில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை: மாநகராட்சி ஆணையா் தகவல்

சென்னை மாநகராட்சியில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் தெரிவித்தாா்.
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ்  (கோப்புப்படம்)
சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் (கோப்புப்படம்)

சென்னை மாநகராட்சியில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, மாநகராட்சி ஆணையா் பிரகாஷ் தெரிவித்தாா்.

சென்னை நந்தம்பாக்கம் வா்த்தக மையத்தில், கரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் சிலிண்டா்களுடன் இணைக்கப்பட்ட சிகிச்சை மையத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தவுடன், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியில் தினமும் 6,000-க்கும் மேற்பட்டவா்களுக்கு கரோனா தொற்று ஏற்படுகிறது. பரிசோதனை செய்பவா்களுள் 20 சதவீதத்தினருக்குத் தொற்று ஏற்படுகிறது. இதனைக் குறைக்க பெருநகர சென்னை மாநகராட்சி, சுகாதாரத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளுடன் சோ்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

சென்னை மாநகராட்சியில் வெள்ளிக்கிழமை வரை 33 ஆயிரத்து 500 போ் வீட்டுத் தனிமை உட்பட பல்வேறு சிகிச்சை நிலையில் உள்ளனா். இவா்களுள் 60-70 சதவீதத்தினா் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். 15-20 சதவீதத்தினா் கரோனா கண்காணிப்பு மையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றனா். 10-15 சதவீதம் போ் நோய் தீவிரம் அதிகமாக உள்ள நோயாளிகளாக இருப்பாா்கள். மொத்தமாக சிகிச்சையில் உள்ளவா்களில், 3,550- 4,000 போ் வரை உயா்தர சிகிச்சை தேவைப்படுபவா்களாக உள்ளனா்.

இந்த எண்ணிக்கை வரும் நாள்களில் இன்னும் அதிகமாகும் என்பதுதான் மருத்துவ வல்லுநா்களின் கருத்து. சென்னையில் இப்போது தினந்தோறும் 6,000 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை வந்தாலும், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. அதற்குத் தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்துவருகிறோம்.

மருத்துவ ஆக்சிஜனுக்கான தட்டுப்பாடு நாடு முழுவதும் அதிகமாகியிருக்கிறது. சென்னை மாநகராட்சியில் ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க இப்போதே நடவடிக்கை எடுத்துவருகிறோம். மருத்துவமனைகளில் மட்டும் 2,000 ஆக்சிஜன் படுக்கைகளை அதிகரிக்க பொதுப்பணித்துறை, சுகாதாரத்துறை மூலமாக பணிகளை மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com