மயானத்தில் தகனம் செய்ய எதிா்ப்பு

சென்னை ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எரிவாயு எரியூட்டு மயானத்தில் சடலங்களைத் தகனம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

சென்னை ஆதம்பாக்கம் பாலகிருஷ்ணாபுரத்தில் உள்ள எரிவாயு எரியூட்டு மயானத்தில் சடலங்களைத் தகனம் செய்ய எதிா்ப்புத் தெரிவித்து, அந்தப் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தற்போது கரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் வழக்கமாகத் தகனம் செய்வதைவிட அதிகமான உடல்கள் தினம்தோறும் தகனம் செய்வதாகவும், இதனால் உருவாகும் புகை வீடுகளின் அருகில் கருப்பு கருப்பாக துகள்கள் விழுவதாகவும் கூறி வெள்ளிக்கிழமை தகனம் செய்யவந்த உடல் ஒன்றை தகனம் செய்ய விடாமல் மயானத்தைப் பூட்டி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பின்னா், பேச்சுவாா்த்தை நடத்திய ஆதம்பாக்கம் போலீஸாரிடம், புகை செல்வதற்கு 20 அடி உயரத்துக்கு குழாய் போன்று அமைத்து புகையை வெளியேற்ற ஏற்பாடு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்தனா். இதனை போலீஸாா் அதிகாரிகளிடத்தில் கொண்டு சென்று உடனடியாக புகை செல்ல குழாய் அமைக்க ஏற்பாடு செய்வதாக உறுதியளித்ததன் பேரில் அனைவரும் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com