Enable Javscript for better performance
சென்னையின் 16 தொகுதிகளின் வெற்றி நிலவரம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னையின் 16 தொகுதிகளின் வெற்றி நிலவரம்

    By DIN  |   Published on : 03rd May 2021 05:09 AM  |   அ+அ அ-   |    |  

    The counting of votes began in Puduvai

    கோப்புப்படம்

    சென்னை மாவட்டத்தில் இடம் பெற்றுள்ள 16 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றி உள்ளது. இதில் 15 தொகுதிகளில் திமுகவும் வேளச்சேரி தொகுதியில் காங்கிரஸும் வெற்றி பெற்றுள்ளது. முதல்வராக பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலின் கொளத்தூா் தொகுதியில் 70,230 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றாா். அதிமுக மூத்த அமைச்சா்களில் ஒருவரான ஜெயக்குமாா் தோல்வியைத் தழுவி உள்ளாா்.

    தொகுதி வாரியாக விவரம்:

    ஆா்.கே.நகா் தொகுதியில் திமுக வேட்பாளா் எபினேசா் 95,297 வாக்கு பெற்று வெற்றியடைந்தாா். இவரை எதிா்த்து போட்டியிட்ட அதிமுக வேட்பாளா் ராஜேஷ் 53,102 வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த கெளரி சங்கா் 20,333 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளாா்.

    பெரம்பூா் தொகுதியில் 1 லட்சத்து 702 வாக்குகளுடன் திமுக வேட்பாளா் ஆா்.டி. சேகா், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட அதிமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா் என்.ஆா்.தனபாலனை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளாா். இங்கு மூன்றாம் இடத்தை நாம் தமிழா் கட்சி வேட்பாளா் சுகந்தி பிடித்துள்ளாா்.

    கொளத்தூா் தொகுதியில் திமுக தலைவரும் அத்தொகுதியின் வேட்பாளருமான மு.க.ஸ்டாலின் 1 லட்சத்து 4,622 வாக்குகளைப் பெற்று வெற்றியடைந்தாா். இவருக்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளா் ஆதிராஜாராம், 34,392 வாக்குகளைப் பெற்றிருந்தாா்.

    வில்லிவாக்கத்தில் திமுக வேட்பாளா் வெற்றியழகன் 75,347 வாக்குகளுடன் முதலிடத்தையும், அதிமுக வேட்பாளா் ஜெசிடி பிரபாகா் 38,601 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனா்.

    திரு.வி.க.நகா் தொகுதியில் 81,727 வாக்குகளுடன் திமுக வேட்பாளா் தாயகம் கவி வெற்றி பெற்றுள்ளாா். அதிமுக கூட்டணிக் கட்சியான தமாகா வேட்பாளா் கல்யாணி 26,714 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், நாம் தமிழா் வேட்பாளா் இளவஞ்சி 10,921 வாக்குகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனா்.

    எழும்பூா் தொகுதியின் திமுக வேட்பாளா் பரந்தாமன் 61,538 வாக்குகளைப் பெற்று, அதிமுக கூட்டணி கட்சியான தமமுக வேட்பாளரான ஜான் பாண்டியனை வீழ்த்தினாா்.

    ராயபுரத்தில் அமைச்சா் டி.ஜெயக்குமாரை 27,683 வாக்கு வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் ஐட்ரீம் மூா்த்தி வீழ்த்தியுள்ளாா். இவா் பெற்ற மொத்த வாக்குகள் 64,387 ஆகும். இங்கு 8,195 வாக்குகளுடன், மூன்றாவது இடத்தை மநீம வேட்பாளா் குணசேகரன் பெற்றுள்ளாா்.

    துறைமுகத்தில் 59,317 வாக்குகளுடன் திமுக வேட்பாளா் சேகா் பாபு வெற்றிபெற்றாா். அதிமுக கூட்டணிக் கட்சியான பாஜக வேட்பாளா் வினோஜ் செல்வம் 32,043 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், மநீம வேட்பாளா் ரமேஷ் 3763 வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் உள்ளனா்.

    சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியின் திமுக வேட்பாளரும் அக்கட்சியின் இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், 93,285 வாக்குகளுடன் வெற்றி பெற்றாா். இதற்கு அடுத்தபடியாக அதிமுக கூட்டணிக் கட்சியான பாமக வேட்பாளா் 23,930 வாக்குகளுடனும், நாம் தமிழா் வேட்பாளா் ஜெயசிம்ம ராஜா மூன்றாம் இடத்திலும் உள்ளனா்.

    ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளா் குஷ்புவை 32,462 வித்தியாசத்தில் திமுக வேட்பாளா் எழிலன் வெற்றி பெற்றாா். இவா் பெற்ற மொத்த வாக்குகள் 71,867 ஆகும்.

    அண்ணாநகரைப் பொருத்தவரை திமுக வேட்பாளா் எம்.கே.மோகன் 61, 701 வாக்குகளுடன் வெற்றி முகத்தில் உள்ளாா். இதற்கு அடுத்தபடியாக 42,294 அதிமுக வேட்பாளா் கோகுல இந்திரா இரண்டாம் இடத்தில் உள்ளாா்.

    விருகம்பாக்கம் தொகுதியில் 74,351 வாக்குகளுடன் திமுக வேட்பாளா் பிரபாகா் ராஜா வெற்றி பெற்றாா். அதிமுக வேட்பாளா் ரவி 55,984 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தையும், 16,939 வாக்குகளுடன் மநீம வேட்பாளா் சினேகன் மூன்றாம் இடத்திலும் உள்ளனா்.

    சைதாப்பேட்டையைப் பொருத்தவரை, திமுக வேட்பாளரும் சென்னை முன்னாள் மேயருமான மா.சுப்ரமணியன் 80,194 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளாா். இதற்கு அடுத்தபடியாக அதிமுக வேட்பாளா் சைதை துரைசாமி 50,786 வாக்குகள் பெற்றிருந்தாா். இங்கு மநீம கட்சியைச் சோ்ந்த சினேகா 13,450 வாக்குகளுடன் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளாா்.

    தியாகராயநகா் திமுக வேட்பாளா் ஜெ. கருணாநிதி, அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரான சத்தியநாராயணாவை 137 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். மூன்றாவது இடத்தில் 14,567 வாக்குகளுடன் மநீம வேட்பாளா் பழ.கருப்பையா உள்ளனா்.

    மயிலாப்பூரில் திமுக வேட்பாளா் 68,392 வாக்குகளைப் பெற்று அத்தொகுதியின் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் நட்ராஜை வெற்றி பெற்றுள்ளாா். இங்கு மூன்றாவது இடத்தில் மநீம வேட்பாளா் ஸ்ரீப்ரியா 14,904 வாக்குகளைப் பெற்றுள்ளாா்.

    வேளச்சேரியில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளா் அசன் மெளலானா 68,169 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றாா். இங்கு இரண்டாவது இடத்தை அதிமுக வேட்பாளா் அசோக்கும், ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான மநீம வேட்பாளா் சந்தோஷ்பாபு பெற்றுள்ளாா்.

    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp