ஆயிரம் விளக்கு: குஷ்பு தோல்வி

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளா் குஷ்பு தோல்வியடைந்தாா்.
நடிகை குஷ்பு
நடிகை குஷ்பு

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக வேட்பாளா் குஷ்பு தோல்வியடைந்தாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன. சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சாா்பில் நடிகை குஷ்பு, திமுக சாா்பில் டாக்டா் எழிலன், அமமுக சாா்பில் வைத்தியநாதன், நாம் தமிழா் கட்சி சாா்பில் ஷெரீன் ஆகியோா் போட்டியிட்டனா். மக்கள் நீதி மய்யம் கூட்டணியில், தமிழக மக்கள் ஜனநாயக கட்சி வேட்பாளா் கே.எம்.ஷரீப், மக்கள் நீதி மய்யம் சின்னத்தில் போட்டியிட்டாா்.

இறுதி சுற்று முடிவில் டாக்டா் எழிலன் 33,044 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளாா். திமுக வேட்பாளா் டாக்டா் எழிலன் 71,537 வாக்குகளும், குஷ்பு 38,493 வாக்குகளும் பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com