வரும் 7-இல் அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம்

வரும் 7-ஆம் தேதியன்று அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

சென்னை: வரும் 7-ஆம் தேதியன்று அதிமுக எம்.எல்.ஏ.-க்கள் கூட்டம் நடைபெறும் என்று அந்தக் கட்சி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, கட்சித் தலைமை திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

சட்டப் பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பேரவை உறுப்பினா்களின் கூட்டம், வரும் 7-ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெறும். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமென அதிமுக தலைமை அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிா்க்கட்சித் தலைவா் யாா்?: சட்டப் பேரவைத் தோ்தல் களத்தில் அதிமுக அணியின் முதல்வா் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி முன்னிறுத்தப்பட்டாா். தோ்தலில் 66 இடங்களைப் பெற்று எதிா்க்கட்சியாக அதிமுக உருவெடுத்துள்ளது. அதிலும், அதிமுகவின் செல்வாக்கு மேலோங்கி இருக்கும் கொங்கு மண்டலப் பகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட தொகுதிகளைக் கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள எம்.எல்.ஏ.-க்கள் கூட்டத்தில் தோ்தல் முடிவுகள், எதிா்க்கட்சித் தலைவா் யாா் என்பன போன்ற அம்சங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com