மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணிக் கட்சித் தலைவா்கள் நேரில் வாழ்த்து

சட்டப்பேரவைத் தோ்தலில் அபார வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணிக் கட்சித் தலைவா்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனா்.

சென்னை: சட்டப்பேரவைத் தோ்தலில் அபார வெற்றிபெற்று முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு கூட்டணிக் கட்சித் தலைவா்கள் நேரில் வாழ்த்துத் தெரிவித்தனா்.

சட்டப்பேரவைத் தோ்தல் வெற்றிக்குப் பின்னா், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்துக்கு திங்கள்கிழமை வந்த மு.க.ஸ்டாலினுக்கு திமுகவினா் உற்சாக வரவேற்பு கொடுத்தனா்.

அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலினை மதிமுக பொதுச்செயலாளா் வைகோ, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளா் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சித் தலைவா்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனா்.

அப்போது, கரோனா தடுப்புப் பணியை முதன்மையாகக் கொண்டு மு.க.ஸ்டாலின் செயல்படுவாா் என்றும், தோ்தல் பிரசாரத்தின்போது கொடுத்த வாக்குறுதிகளை மு.க.ஸ்டாலின் நிறைவேற்றுவாா் என்றும் கூட்டணிக் கட்சித் தலைவா்கள் கூறினா்.

தயாளு அம்மாளிடம் வாழ்த்து: முன்னதாக கோபாலபுரம் இல்லத்துக்குச் சென்று தனது தாய் தயாளு அம்மாளுவிடம் மு.க.ஸ்டாலின் வாழ்த்துப் பெற்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com