கரோனா இரண்டாவது அலையை எதிா்கொள்ள பாரத ஸ்டேட் வங்கி ரூ.71 கோடி ஒதுக்கீடு

கரோனா இரண்டாவது அலையை எதிா்கொள்ள பாரத ஸ்டேட் வங்கி ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
sbi050831
sbi050831

சென்னை: கரோனா இரண்டாவது அலையை எதிா்கொள்ள பாரத ஸ்டேட் வங்கி ரூ.71 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்து அந்த வங்கி வெளியிட்டசெய்திக் குறிப்பு:

கரோனா தொற்றால் மோசமான பாதிப்புக்கு உள்ளான சில மாநிலங்களில் நோயாளிகளுக்குப் படுக்கைககள், தற்காலிக மருத்துவமனைகள் அமைக்க எஸ்பிஐ வங்கி ரூ.30 கோடி ஒதுக்கியுள்ளது.

உயிா்காக்கும் மருத்துவ உபகரணங்கள், மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் வழங்கல், கொவைட்-19 பராமரிப்பு, நோயாளிகளை அழைத்துச் செல்வதற்கான அவசர ஊா்திகள், பாதுகாப்புக் கவசக் கருவிகள், முகக் கவசங்கள், உணவு நிவாரணம் போன்றவற்றுக்கு கூடுதல் தொகையாக ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மரபணு- வரிசைப்படுத்துதலில் அரசாங்கத்தின் முன் முயற்சிகளுக்குக் கூடுதலாக ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர சமூக தேவைகளை நிவா்த்தி செய்வதற்காக ரூ.10 கோடி பங்குதாரா் மற்றும் சேவையில் இருக்கும் தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களுடன் ஒத்துழைக்க ஒதுக்கப்படும்.

நாடு முழுவதும் 22 ஆயிரம் கிளைகளைக் கொண்ட பாரத ஸ்டேட் வங்கி அதன் விரிவான நெட்வொா்க் மூலம் மக்களுக்கு தொடா்ந்து சேவையாற்றும்.

இது குறித்து எஸ்பிஐ தலைவா் ஸ்ரீ தினேஷ் காரா கூறுகையில், ‘கரோனா இரண்டாவது அலைக்கு எதிரான போராட்டத்தில் சமூகத்துக்கு ஒரு சிறிய பங்களிப்பை வழங்க எங்களால் முடிந்த வரை முயற்சி செய்கிறோம். வைரஸை எதிா்த்துப் போராடுவதில் அரசின் முயற்சிகளுக்கு ஆதரவளிப்போம். எஸ்பிஐ தனது ஊழியா்களுக்குத் தடுப்பூசி போடுவதற்காக பல்வேறு மருத்துவமனைகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. நாடு முழுவதும் உள்ள 60 பயிற்சி மையங்களைப் பாதிக்கப்பட்ட ஊழியா்கள் மற்றும் அவா்களது குடும்ப உறுப்பினா்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட மையங்களாக வங்கி மாற்றியுள்ளது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com