நுரையீரல் மோசமாக பாதித்த நோயாளிக்கு எக்மோ சிகிச்சை அளித்து காப்பாற்றிய டாக்டர்கள்

கரோனா நோய்த்தொற்றால் பாதிப்பு மற்றும் நுரையீரல் செயல்பாடு மிக மோசமாக இருந்த 34 வயது நோயாளிக்கு எக்மோ சிகிச்சை அளித்து, அவரின் உயிரை  ஃபோர்ட்டீஸ் மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றினர்.


சென்னை: கரோனா நோய்த்தொற்றால் பாதிப்பு மற்றும் நுரையீரல் செயல்பாடு மிக மோசமாக இருந்த 34 வயது நோயாளிக்கு எக்மோ சிகிச்சை அளித்து, அவரின் உயிரை ஃபோர்ட்டீஸ் மருத்துவமனை டாக்டர்கள் காப்பாற்றினர்.
கடந்த 2019-ஆம் ஆண்டில் ஹமீம்(34) என்ற இளைஞர் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டார்.
அவரைப் பரிசோதித்தபோது, நுரையீரல் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் உயிர் வாழ வெண்டிலேட்டர் துணை தேவைப்பட்டது. அவரது உடல் நிலை முன்னேற்றம் இல்லாத நிலையில், வடபழனி ஃ போர்ட்டிஸ் மருத்துவமனை இதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவைசிகிச்சை தலைவர் டாக்டர் கோவினி பாலசுப்பிரமணியத்திடம் சிகிச்சை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டார்.
அங்கு, ஹமீமை டாக்டர் கோவினி பாலசுப்பிரமணியம் மற்றும் மருத்துவக்குழுவினர் பரிசோதித்தனர். இதையடுத்து,நுரையீரல் மாற்று சிகிச்சைக்குப் பரிந்துரை செய்தனர். இருப்பினும் அவருக்கு உடனடியாக எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவரை 6 மாதங்களுக்கு மேலாக கண்காணித்து வந்தனர். தற்போது, நோயாளி இயன்முறை மருத்துவப் பயிற்சி செய்ய முடிகிறது. 200 நாள்களுக்கு மேலாக எக்மோ சிகிச்சை மூலமாக, ஹமீம் உயிர்ப்பிழைத்துள்ளார்.
இது குறித்து டாக்டர் கோவினி பாலசுப்பிரமணி கூறியது: எக்மோ சிகிச்சையின் கீழ், சிகிச்சை பெரும் எந்த நோயாளிக்கும் மருத்துவமனையில் தங்கியிருத்தல் மற்றும் சராசரி உயிர் வாழும் காலம் 45 நாள்கள் என்று இருந்தது. 100 சதவீதம் ஆக்ஸிஜன் ஆதரவோடு கூட ஒரு நோயாளி 50 சதவீதம் ஆக்சிஜன் அளவை பராமரிக்காதபோது, நோயாளி வெண்டிலேட்டர் இயந்திர உதவியின் கீழ் கொண்டு வரப்பட்டு, பின்னர் தேவைக்கேற்க எம்மோ சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்படுவார்கள். எம்மோ நன்மை அளிக்கும் சிகிச்சை என்றாலும், ஒரு நோயாளியின் உறுப்புகள் சுயமாக செயல்பட இயலாமல் போகும்போது, இந்த சிகிச்சை கடைசி முயற்சியாகப் பயன்படுத்தப்படுகிறது. சரியான நேரத்தில் எக்மோ சிகிச்சை கொடுத்தால், நோயாளியின் உயிரைக் காப்பாற்ற முடியும் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com