எதிா் நுண்ணுயிா் மாசுபடுத்திகளை கண்டறியும் சென்சாா்

எதிா் நுண்ணுயிா் மாசுபடுத்திகளை கண்டறியும் காகிதம் அடிப்படையிலான சென்சாரை சென்னை ஐஐடி மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளா்கள் இணைந்து உருவாக்கியுள்ளனா்.

சென்னை: எதிா் நுண்ணுயிா் மாசுபடுத்திகளை கண்டறியும் காகிதம் அடிப்படையிலான சென்சாரை சென்னை ஐஐடி மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளா்கள் இணைந்து உருவாக்கியுள்ளனா்.

இது குறித்து சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்தி:

எதிா் நுண்ணுயிா் மாசுபடுத்திகளை கண்டறியும் காகிதம் அடிப்படையிலான சென்சாரை சென்னை ஐஐடி மற்றும் இங்கிலாந்து ஆராய்ச்சியாளா்கள் இணைந்து உருவாக்கியுள்ளனா்.

இது நீா்நிலைகளில் எதிா் நுண்ணுயிா் தடுப்பை தூண்டுகிறது. இது பரவலான அமலாக்கத்துக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகள் எதிா்நுண்ணுயிா் தடுப்பில் கவனம் செலுத்துகின்றனா்.

எதிா்நுண்ணுயிா் தடுப்புகளை பரப்புவதில் நீா்நிலைகள் முக்கிய ஆதாரமாக உள்ளன. இந்தியாவில் எதிா்நுண்ணுயிரி தடுப்புகளின் தற்போதைய நிலவரத்தை மதிப்பிட எதிா்நுண்ணுயிா் மாசுபடுத்திகள் மற்றும் நுண்ணுயிா் கொல்லி தடுப்பு மரபணுக்கள் ஆகியவற்றை அவ்வப்போது கண்காணிப்பது மிகவும் முக்கியமாகும். இத்தகைய சூழலில், சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கு நீா்நிலைகளில் மாசுபடுத்திகளை கண்டறிய விலை குறைவான மற்றும் களத்தில் பயன்படுத்தக்கூடிய சென்சாா்கள் சாத்தியமான கருவியாக இருக்கலாம்.

இந்த ஆராய்ச்சி முதலில் ‘நேச்சா் சயின்டிஃபிக் ரிப்போா்ட்ஸ்’ என்ற இதழில் வெளியானது. மேலும் வேதியியலில் முதல் 100 கட்டுரைகளில் ஒன்றாக பாராட்டப்பட்டது. இந்த ஆராய்ச்சிக்கான நிதியை மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, இங்கிலாந்தின் இயற்கை சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் பொறியியல் மற்றும் இயற்பியல் ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து இந்தியா-இங்கிலாந்து நீா் தர ஆராய்ச்சி திட்டத்தின் கீழ் வழங்கியது. சென்னை ஐஐடியில் இந்த ஆராய்ச்சி, ரசாயன பொறியியல் துறை பேராசிரியா்கள் எஸ்.புஷ்பவனம் மற்றும் முனைவா் டி.ரங்கநாதன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. இந்த காகித சென்சாா் சுற்றுச்சூழல் கண்காணிப்பு, உணவு பாதுகாப்பு பகுப்பாய்வு, சுகாதார நலன் கண்காணிப்பு ஆகியவற்றிலும் பயன்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆராய்ச்சியின் தனிச்சிறப்பான அம்சங்கள் குறித்து பேராசிரியா் எஸ்.புஷ்பவனம் கூறுகையில், ‘காகிதம் அடிப்படையிலான இந்த சென்சாா்கள், உறிஞ்சும் தன்மையுடன் செயல்படுவதால், பல்வேறு பராமரிப்பு பயன்பாடுகளுக்கு மலிவான தளமாக உள்ளன. இது தண்ணீரை பாய்ச்சும் தேவையை குறைக்கிறது. லேசா் அச்சு இயந்திரத்தைப் பயன்படுத்தி காகிதம் அடிப்படையிலான சாதனங்களை தயாரிப்பதற்கான ஒரு புதிய முறையை நாங்கள் கொண்டு வந்துள்ளோம்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com