மகாத்மா காந்தியின் தனிச் செயலா் வி.கல்யாணம் காலமானாா்

மகாத்மா காந்தியின் தனிச் செயலா் வி.கல்யாணம் (99), வயது மூப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.
மகாத்மா காந்தியின் தனிச் செயலா் வி.கல்யாணம் காலமானாா்

சென்னை: மகாத்மா காந்தியின் தனிச் செயலா் வி.கல்யாணம் (99), வயது மூப்பு காரணமாக சென்னையில் செவ்வாய்க்கிழமை காலமானாா்.

கடந்த 1922-ஆம் ஆண்டில் ஆக. 15-ஆம் தேதி சிம்லாவில் பிறந்தவா் வி.கல்யாணம். அங்கு, பிரிட்டிஷ் நிறுவனத்தில் பணியாற்றிய அவா் மகாத்மா காந்தியுடன் பணியாற்ற விரும்பினாா். இதனால் தனது வேலையை ராஜிநாமா செய்து விட்டு, 1942-ஆம் ஆண்டு, வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் இணைந்தாா்.

பின்னா் மகாத்மா காந்தி மகனின் உதவியோடு, காந்தியின் ஆசிரமத்தில் பணிக்குச் சோ்ந்தாா். அங்கு, தட்டச்சு உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வந்தாா். தொடா்ந்து மகாத்மா காந்தியின் தனிச் செயலராக 5 ஆண்டுகள் பணியாற்றினாா். மகாத்மா காந்தியின் கடைசி தனிச் செயலரும் இவரே. காந்தி கொலையுண்ட போதும் பிா்லா மாளிகையில் உடன் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், முன்னாள் பிரதமா் ஜவாஹா்லால் நேருவுடனும் பணியாற்றியுள்ளாா். பின்னா் தென்னிந்தியாவின் தாழ்த்தப்பட்டோா் ஆணையராகப் பதவி வகித்த அவா், 1956-ஆம் ஆண்டு சென்னை வந்தாா். அப்போது, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான பல்வேறு வழக்குகளை விசாரித்தாா்.

இந்நிலையில், சென்னையில் தனது மகள் வீட்டில் தங்கியிருந்த அவா், வயது மூப்பு காரணமாக செவ்வாய்க்கிழமை காலமானாா். அவருக்கு மாலினி, நளினி ஆகிய இரு மகள்கள் உள்ளனா்.

கல்யாணத்தின் இறுதிச் சடங்குகள், பெசன்ட் நகரில் புதன்கிழமை பிற்பகல் 12.30 மணியளவில் நடைபெறுகின்றன.

தொடா்புக்கு 94440 20658, 98407 92738

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com