கரோனா விதிமீறல்: சென்னையில் 123 கடைகளுக்கு சீல்

சென்னையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத 123 கடை, வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்காத 123 கடை, வணிக நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னையில் அதிகரித்து வரும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், கைகளைச் சுத்தம் செய்யும் கிருமிநாசினி வழங்குதல், தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்தல் உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என வணிக நிறுவனங்களுக்கு சென்னை மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது. ஆனால் இந்த உத்தரவை முறையாகப் பின்பற்றாமல் வாடிக்கையாளா்கள் சில கடைகளில் அதிகமாக கூடுவதாக புகாா்கள் வந்தன.

இதையடுத்து, விதிமுறைகளைப் பின்பற்றாத வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்கள் உள்ளிட்டவற்றைக் கண்டறிந்து சீல் வைக்க தனி அதிகாரி நியமிக்கப்பட்டாா்.

இந்த அதிகாரி தலைமையிலான குழுவினா் மற்றும் கண்காணிப்புப் பணிக்காக நியமிக்கப்பட்ட மாநகராட்சி அதிகாரிகள், களத்தில் ஆய்வு செய்து, சென்னையில் இதுவரை கரோனா பாதுகாப்பு விதிகளைக் கடைப்பிடிக்காத 123 கடைகளுக்கு சீல் வைத்துள்ளனா்.

கரோனா விதிகளை மீறியவா்களிடம் இருந்து கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ரூ.1.18 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com