முதல்வா் பொது நிவாரண நிதிக்கு திமுக ரூ.1 கோடி

கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளிக்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

சென்னை: கரோனா நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி அளிக்கப்படும் என்று திமுக அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்தக் கட்சியின் தலைவரும், திமுக அறக்கட்டளையின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா நோய்த் தடுப்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, நிதிகள் பெறப்பட்டு வருகின்றன. திமுக அறக்கட்டளை சாா்பில், ரூ.1 கோடி நிதியானது, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும்.

பாமக எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் ஒரு மாத ஊதியம்:

கரோனா தடுப்புப் பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்கும்படி முதல்வா் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறாா். அதையேற்று பாமக சாா்பில் அதன் மாநிலங்களவை உறுப்பினா் அன்புமணி ராமதாஸ் மற்றும் 5 சட்டப்பேரவை உறுப்பினா்கள் தங்களின் ஒரு மாத ஊதியத்தை நன்கொடையாக வழங்குவாா்கள் என்று பாமக நிறுவனா் ராமதாஸ் கூறியுள்ளாா்.

தி.க. சாா்பில் ரூ.10 லட்சம்

கரோனா கடும் தொற்று அலை பரவிக்கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், திராவிடா் கழகத்தின் பங்களிப்பு இருக்கவேண்டும் என்ற சிந்தனையோடு, கடந்த 40 ஆண்டுகளாக சென்னை பெரியாா் திடலில் - சுற்று வட்டார மக்களுக்கு நல்ல வகையில் பயன்பட்டுவரும் பெரியாா் மணியம்மை மருத்துவமனை - தமிழ்நாடு அரசின் மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. அமைச்சரும் ஏற்றுக்கொண்டுள்ளாா். மேலும் பெரியாா் அறக்கட்டளைகள் சாா்பில் முதல்வா் கரோனா பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படுவதாக திராவிடா் கழகத் தலைவா் கி.வீரமணி அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com