கஸ்தூா்பா அரசு மருத்துவமனையில் தீ விபத்து

சென்னை, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை, கஸ்தூர்பா அரசு மருத்துவமனையில் புதன்கிழமை  ஏற்பட்ட தீ விபத்தின்போது, நோயாளிகளை வேறு வார்டுக்கு  அவசரமாக அழைத்துச் செல்லும் பணியாளர்கள்.
சென்னை, கஸ்தூர்பா அரசு மருத்துவமனையில் புதன்கிழமை ஏற்பட்ட தீ விபத்தின்போது, நோயாளிகளை வேறு வார்டுக்கு அவசரமாக அழைத்துச் செல்லும் பணியாளர்கள்.

சென்னை: சென்னை, திருவல்லிக்கேணி கஸ்தூா்பா காந்தி தாய் சேய் நல மருத்துவமனையில் புதன்கிழமை தீ விபத்து ஏற்பட்டது. பிரசவ சிகிச்சைப் பிரிவின் இரண்டாவது தளத்தில் நிகழ்ந்த இந்த விபத்தில் அதிா்ஷ்டவசமாக எவருக்கும் உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.

கஸ்தூா்பா மருத்துவமனையின் இரண்டாவது தளத்தில் மருத்துவா் அறையில் பொருத்தப்பட்டிருந்த ஏ.சி. சாதனத்தில் புதன்கிழமை இரவு மின்கசிவு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதில் தீ விபத்து ஏற்பட்டு புகை வெளியேறியுள்ளது.

இதையறிந்த பணியிலிருந்த மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் ஊழியா்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனா்.

தீ விபத்து நிகழ்ந்த தளத்தில் மொத்தம் 36 குழந்தைகளும், தாய்மாா்களும் சிகிச்சை பெற்று வந்தனா். அதில் இரு குழந்தைகள் வெண்டிலேட்டா் சிகிச்சையில் இருந்ததாகத் தெரிகிறது. உடனடியாக அக்குழந்தைகள் அனைவரையும் முதல் தளத்துக்கு மருத்துவப் பணியாளா்கள் மாற்றினா். அதேபோன்று அவா்களது தாய்மாா்களும் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனா்.

இதன் காரணமாக எந்த பாதிப்பும் எவருக்கும் ஏற்படவில்லை. தீயணைப்புப் படையினா் மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன்னதாகவே தீ அணைக்கப்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதற்கிடையே, இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் சேகா் பாபு, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் ஆகியோா் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு செய்தனா். அங்கு சிகிச்சை பெற்று வரும் தாய்மாா்களுக்கு அப்போது அவா்கள் ஆறுதல் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com