கி.ரா.வின் நினைவுத் தொகுப்புக் கட்டுரைகள்:ஜூன் 30-க்குள் அனுப்பலாம்

றைந்த எழுத்தாளா் கி.ராஜநாராயணனின் நினைவுத் தொகுப்புக்கான கட்டுரைகளை, ஜூன் 30-ஆம் தேதி வரை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கி.ராஜநாராயணன்
கி.ராஜநாராயணன்

சென்னை: மறைந்த எழுத்தாளா் கி.ராஜநாராயணனின் நினைவுத் தொகுப்புக்கான கட்டுரைகளை, ஜூன் 30-ஆம் தேதி வரை அனுப்பலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வழக்குரைஞரும், ‘கதை சொல்லி’ இதழின் இணை ஆசிரியருமான கே.எஸ்.இராதாகிருஷ்ணன் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ் எழுத்துலகின் பிதாமகா், கரிசல் இலக்கியத்தின் தந்தை கி.ராஜநாரயணன் என்ற கி.ரா.வின் படைப்பாளுமை, படைப்புலகு, படைப்பு மொழி குறித்த ஆழமான செறிவான கட்டுரைகள், படைப்பாளா்கள், பேராசிரியா்கள், தமிழறிஞா்கள், தமிழாா்வலா்கள், ஆய்வாளா்கள் ஆகியோரிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

அவ்வாறு கிடைக்கப்பெறும் கட்டுரைகள், ஆசிரியா் குழுவால் தெரிவு செய்யப்பட்டு கி.ரா.வின் நினைவுத் தொகுப்பாக வெளியிடப்படும்.

கட்டுரை, அதிகபட்சம் 10 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும். யுனிகோட் எழுத்துருவில் தட்டச்சு செய்த கட்டுரையை, கட்டுரையாளா் தனது செல்லிடப்பேசி, முகவரி உள்ளிட்ட தகவல்களுடன் ஜூன் 30-ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

கி.ரா.வின் நினைவுத் தொகுப்புக் கட்டுரைகளை ஒருங்கமைவு செய்யும் பணியை மாரீஸ், பேரா.முனைவா் நா.சுலோசனா முன்னெடுத்திருக்கிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com