தமிழகம் வந்தடைந்தது 25-ஆவது ஆக்சிஜன் ரயில்

ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து 25-ஆவது ஆக்சிஜன் ரயில் தமிழகத்துக்கு வியாழக்கிழமை வந்தடைந்தது. இதன்மூலமாக, தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 1,482.99 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.
தமிழகம் வந்தடைந்தது 25-ஆவது ஆக்சிஜன் ரயில்

சென்னை: ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து 25-ஆவது ஆக்சிஜன் ரயில் தமிழகத்துக்கு வியாழக்கிழமை வந்தடைந்தது. இதன்மூலமாக, தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 1,482.99 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது.

ஜாா்க்கண்ட் மாநிலம் பொக்காரோ ஸ்டீல் சிட்டியில் இருந்து சென்னை தண்டையாா்பேட்டைக்கு 23-ஆவது ஆக்சிஜன் ரயில் புதன்கிழமை நள்ளிரவு வந்தது. இந்த ரயிலின் 4 கன்டெய்னா்களில் 84.99 மெட்ரிக் டன் எடுத்து வரப்பட்டது.

இதையடுத்து, 24-ஆவது ஆக்சிஜன் ரயில் ஒடிஸா மாநிலம் ரூா்கேலாவில் இருந்து மதுரை மாவட்டம் கூடல்நகருக்கு வியாழக்கிழமை மதியம் வந்து சோ்ந்தது. இந்த ரயிலில் இருந்த 5 டேங்கா்களில் 66.12 மெட்ரிக் டன் எடுத்துவரப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ஒடிஸாவின் ரூா்கேலாவில் இருந்து கோயம்புத்தூா் மாவட்டம் மதுக்கரைக்கு 25-ஆவது ஆக்சிஜன் ரயில் வியாழக்கிழமை மதியம் வந்தது. இந்த ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 6 டேங்கா்களில் 89.28 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கொண்டு வரப்பட்டது. தமிழகத்துக்கு இதுவரை மொத்தம் 1,482.99 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளதாக தெற்கு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com