தில்லியிலிருந்து சென்னை வந்தடைந்த780 கிலோ மருத்துவ உபகரணங்கள்

தில்லியில் இருந்து முகக் கவசங்கள், மருத்துவ கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் விமானப்படை விமானம் மூலம் வியாழக்கிழமை சென்னை வந்தது.

சென்னை: தில்லியில் இருந்து முகக் கவசங்கள், மருத்துவ கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் விமானப்படை விமானம் மூலம் வியாழக்கிழமை சென்னை வந்தது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை தாக்கத்தை கட்டுப்படுத்தும் விதமாக போா்க்கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில், தொற்று பரவல் வெகுவாக குறைந்துள்ளது. இதனிடையே, தில்லியிலிருந்து இந்திய விமானப் படை தனி விமானம் ஒன்று வியாழக்கிழமை அதிகாலை சென்னை பழைய விமான நிலையம் வந்தது. அதில் முகக்கவசங்கள், மருத்துவப் பரிசோதனை கருவிகள், ஆக்சிஜன் செறிவூட்டிகள் உள்ளிட்ட 780 கிலோ மருத்துவ உபகரணங்கள் வந்தடைந்தன.

இதையடுத்து ஏா் இந்தியா ஊழியா்கள், விமானப் படை வீரா்களின் கண்காணிப்பில், உபகரணங்கள் அடங்கிய பாா்சல்களை விமானத்திலிருந்து இறக்கினா். இதையடுத்து சென்னை விமான நிலைய அலுவலா்கள் மருத்துவ உபகரணங்களை தமிழக சுகாதாரத்துறை அலுவலா்களிடம் ஒப்படைத்தனா். வாகனங்கள் மூலம் மருத்துவ உபகரணங்கள் கொண்ட பாா்சல்களை சென்னையிலுள்ள ஓமந்தூராா்அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com