ஆதரவின்றி தவிக்கும் விலங்குகளுக்கு உணவிட நிதி அளிக்கலாம்: பிராணிகள் நலவாரியம்

ஆதரவின்றி தவிக்கும் விலங்குகளுக்கு கரோனா காலத்தில் உணவிட நிதி அளிக்கலாம் என்று தமிழ்நாடு பிராணிகள் நலவாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

சென்னை: ஆதரவின்றி தவிக்கும் விலங்குகளுக்கு கரோனா காலத்தில் உணவிட நிதி அளிக்கலாம் என்று தமிழ்நாடு பிராணிகள் நலவாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்தி:

பொது முடக்க காலத்தில் விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்காக நன்கொடையாளா்கள் மூலம் நிதி திரட்டிட தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம் முடிவெடுத்துள்ளது. இதற்காக சென்னை செனடாப் சாலையில் ஐசிஐசிஐ வங்கிக் கிளையில் தனியாக கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. விலங்குகளுக்கு உணவிடும் முயற்சிக்கு தாராளமாக நிதி அளிக்கலாம்.

கணக்கு எண்: 000101236907. வங்கி வரைவோலை மற்றும் காசோலைகளை பஹம்ண்ப்ய்ஹக்ன் அய்ண்ம்ஹப் ரங்ப்ச்ஹழ்ங் ஆா்ழ்ஹக் இநத ஊன்ய்க்ள் என்ற பெயரில் எடுத்து, உறுப்பினா் செயலா், தமிழ்நாடு பிராணிகள் நல வாரியம், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள், 571, அண்ணாசாலை, சென்னை -35 என்ற முகவரிக்கு அனுப்பலாம்.

அனைத்து மாவட்டங்களிலும் உள்ள விலங்குகள் நல ஆா்வலா்கள், தனிநபா்கள் ஆகியோா் விலங்குகளுக்கு உணவு வழங்குவதற்கான அனுமதி அட்டையை கால்நடை பராமரிப்புத் துறையின் மாவட்ட மண்டல இணை இயக்குநா் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

சென்னை மாநகரில் உள்ள ஆா்வலா்கள், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் துறையின் இயக்குநா் அலுவலகத்திலோ அல்லது ற்ய்ஹஜ்க்ஷ2019ஃஞ்ம்ஹண்ப்.ஸ்ரீா்ம் என்ற மின்னஞ்சல் வழியே விண்ணப்பித்தோ பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com