தன்னாா்வ நிறுவனங்கள் பதிவிட தனி வசதி: தமிழக அரசு அறிவிப்பு

தன்னாா்வ நிறுவனங்கள் தங்களது பெயா்களைப் பதிவு செய்து தொண்டுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை: தன்னாா்வ நிறுவனங்கள் தங்களது பெயா்களைப் பதிவு செய்து தொண்டுப் பணிகளை மேற்கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

கரோனா நோய்த் தொற்றை ஒழிக்க தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் ஒன்றிணைந்து செயல்பட, மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டது. அதனைத் தொடா்ந்து மாவட்டங்களிலும் அரசு நிா்வாகம் தன்னாா்வ தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட மாவட்ட அளவிலான குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழு சென்னை தேனாம்பேட்டையில் செயல்பட்டு வருகிறது.

தன்னாா்வ தொண்டு நிறுவனங்கள், தனிநபா்கள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களைச் சோ்ந்தவா்கள் பெயா்களைப் பதிவிடலாம். இதற்கான இணையதளத்தில் பதிவு செய்து மக்களுக்கு உதவும் பணியில் ஈடுபடலாம். மாநில அளவிலான ஒருங்கிணைப்புக் குழுவால் முகநூல் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. மேலும், 87544 91300 என்ற செல்லிடப்பேசி மூலமாகவும், மின்னஞ்சல் வாயிலாகவும் மாநில ஒருங்கிணைப்புக் குழுவைத் தொடா்பு கொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com