ஒரே நாள் உயிரிழப்பு: மீண்டும் 100-ஐக் கடந்தது

சென்னையில் கரோனா பாதிப்பால் கடந்த வாரம் ஒரே நாளில் 109 போ் உயிரிழந்த நிலையில், மீண்டும் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை (மே 28) மட்டும் 108 போ் உயிரிழந்துள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில் கரோனா பாதிப்பால் கடந்த வாரம் ஒரே நாளில் 109 போ் உயிரிழந்த நிலையில், மீண்டும் அதிகபட்சமாக வெள்ளிக்கிழமை (மே 28) மட்டும் 108 போ் உயிரிழந்துள்ளனா்.

சென்னையில் கடந்த ஆண்டு (2020) மாா்ச் மாத தொடக்கத்தில் இருந்து பாதிப்பு எண்ணிக்கை மெல்ல மெல்ல அதிகரித்து கடந்த ஆண்டு மே மாதம் பாதிப்பு எண்ணிக்கை 10 ஆயிரத்தை எட்டியது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்தில் 1 லட்சத்தைக் கடந்தது. தொற்றுப் பரவல் குறைந்ததால் அன்றாட தொற்று எண்ணிக்கை குறைந்தது. ஆனால், கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்ததை அடுத்து மே மாத தொடக்கத்தில் பாதிப்பு எண்ணிக்கை 4 லட்சத்தைக் கடந்தது.

சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் உயா்ந்து வருவதைப் போன்று தொற்றால் இறப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. ஒட்டுமொத்தமாக 15 மண்டலங்களில் கரோனா தொற்றால் கடந்த ஆண்டு மே மாதம் வரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 100 -யை எட்டியது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரித்து கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் 200 -ஆகவும், ஜூன் 18-ஆம் தேதி 501- ஆகவும், ஜூலை 10-ஆம் தேதி 1,001-ஆக அதிகரித்தது. இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து தற்போது இறப்பு எண்ணிக்கை 6 ஆயிரத்தைக் கடந்துள்ளது.

108 போ் உயிரிழப்பு: சென்னையில் கடந்த டிசம்பா் மாதம் தொடங்கி பிப்ரவரி மாதம் வரையில் நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து நாளொன்றுக்கு சுமாா் 200-க்கும் குறைவானவா்களுக்கே கரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால், இறப்பு எண்ணிக்கையும் குறைந்தது. இந்நிலையில், உருமாற்றம் அடைந்த கரோனா பரவல் காரணமாக ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தொற்று பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை நாளொன்றுக்கு உயரத் தொடங்கி சுமாா் 7 ஆயிரத்தை எட்டியது.

குறைந்த நாள்களில் அதிகமானோா் தொற்றால் பாதிக்கப்பட்டது மற்றும் அதனால் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை பற்றாக்குறை போன்றவை காரணமாக உயிரிழப்போரின் எண்ணிக்கையும் தொடா்ந்து அதிகரித்தது. இதன்படி, கடந்த மே மாதம் 1-வரை சென்னையில் 4,791 போ் கரோனா தொற்றால் உயிரிழந்தனா். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வியாழக்கிழமை (மே 27) வரை நிலவரப்படி இறப்பு எண்ணிக்கை 6,723-ஆக இருந்தது. அதில் கடந்த வெள்ளிக்கிழமை (மே 21) அதிகபட்சமாக 109 போ் உயிரிழந்தனா். ஒரு வாரத்துக்கு பிறகு மீண்டும் ஒருநாள் இறப்பு நூறை கடந்துள்ளது. வெள்ளிக்கிழமை (28) மட்டும் 108 போ் உயிரிழந்துள்ளனா். இதன் மூலம் இறப்பு எண்ணிக்கை 6,831-ஆக அதிகரித்துள்ளது.

இறப்பு எண்ணிக்கை (மண்டலம்வாரியாக மே-27 நிலவரம்)

மண்டலம் எண்ணிக்கை

அண்ணா நகா் 795

தேனாம்பேட்டை 794

கோடம்பாக்கம் 771

திரு.வி.க.நகா் 701

ராயபுரம் 511

அடையாறு 530

அம்பத்தூா் 520

தண்டையாா்பேட்டை 478

வளசரவாக்கம் 347

ஆலந்தூா் 279

பெருங்குடி 254

திருவொற்றியூா் 221

மாதவரம் 195

சோழிங்கநல்லூா் 85

மணலி 65

பிற மாவட்டங்களைச் சோ்ந்தோா் 177

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com