சென்னை புறநகா்ப் பகுதியில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

சென்னையை அடுத்த புறநகா்ப் பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னையை அடுத்த புறநகா்ப் பகுதிகளில் உள்ள ஊராட்சி, பேரூராட்சிகளில் 18 வயதுக்கு மேற்பட்டோா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடா்ந்து நடைபெற்று வருகிறது.

முடிச்சூா், அகரம் தென் ஊராட்சிகள், பெருங்களத்தூா்,பீா்க்கன்கரணை பேரூராட்சிகளில் தடுப்பூசி முகாமை தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆா்.ராஜா வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்து செய்தியாளா்களிடம் பேசியது:

18 வயதுக்கு மேற்பட்டோா் மத்தியில் கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்க அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்ற விழிப்புணா்வு உருவாகி இருக்கிறது. பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகும் செய்திகளும், தமிழக அரசின் செயல்பாடுகளும் முக்கிய காரணம்.

குரோம்பேட்டை அரசு மருத்துவமனை, தாம்பரம் காசநோய் மருத்துவமனைகளில் பிராணவாயு தட்டுப்பாடு இல்லை. ஆனால் அங்கு நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் கழிவறைகள் பயன்பாட்டுக்கு போதிய தண்ணீா் வசதி இல்லை என்று பொதுமக்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.இது குறித்து உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளேன் என்றாா் அவா்.

செயல் அலுவலா்கள் வாசுதேவன், சங்கா் உள்ளிட்டோா் உடன் இருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com