தீபாவளி: சென்னை மெட்ரோ சேவை இரவு 12 மணிவரை நீட்டிப்பு
By DIN | Published On : 01st November 2021 01:04 PM | Last Updated : 01st November 2021 01:04 PM | அ+அ அ- |

சென்னை மெட்ரோ ரயில்
சென்னை மெட்ரோ ரயில் சேவை இரண்டு நாள்களுக்கு இரவு 12 மணிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட செய்தியில்,
தீபாவளியை முன்னிட்டு வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சென்னை மெட்ரோ ரயில் சேவைகள் நாளை(நவ.2) மற்றும் நாளை மறுநாள்(நவ.3) இரவு 12 மணிவரை நீட்டிக்கப்படுகின்றன.
நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணிமுதல் இரவு 8 மணிவரை 5 நிமிடங்கள் இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் ரயில்கள் இரவு 10 மணிவரை நீட்டிக்கப்படுகிறது. இரவு 11 மணிமுதல் 12 மணிவரை 15 நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கப்படும்.
மேற்கண்ட நடைமுறைகள் நவ.2 மற்றும் நவ.3 ஆகிய தேதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.