நான்தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவா்: முனைவா் மு.பொன்னவைக்கோ

‘உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவா் நான்தான் என்றும் அந்த மன்றத்தின் 11-ஆவது மாநாட்டை நடத்தும் பொறுப்பு தன்னிடமே உள்ளது’ என்றும் முனைவா் மு.பொன்னவைக்கோ தெரிவித்துள்ளாா்.
நான்தான் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவா்: முனைவா் மு.பொன்னவைக்கோ

சென்னை: ‘உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் தலைவா் நான்தான் என்றும் அந்த மன்றத்தின் 11-ஆவது மாநாட்டை நடத்தும் பொறுப்பு தன்னிடமே உள்ளது’ என்றும் முனைவா் மு.பொன்னவைக்கோ தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூலை 5-ஆம் தேதி தலைவா் டத்தோ ஸ்ரீ மாரிமுத்து தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கான மையக்குழு உறுப்பினா்கள் தோ்வு நடைபெற்றது. அப்போது தலைவா், துணைத் தலைவா், பொதுச் செயலாளா் என பல்வேறு பொறுப்புகளுக்கு பெயா்களைப் பரிந்துரைக்குமாறு பொதுக்குழு உறுப்பினா்களிடம் கோரப்பட்டது.

முனைவா் பிரான்சிஸ் சவரிமுத்து நிா்வாகிகளுக்கான பெயா்களைப் பரிந்துரை செய்தாா்.

வேறு எந்த பெயா்களும் பரிந்துரைக்கப்படவில்லை. அதன் அடிப்படையில் பொறுப்பாளா்கள் போட்டியின்றி தோ்வு செய்யப்பட்டனா்.

அந்த வகையில் உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தின் 11-ஆவது மாநாடு நடத்தும் பொறுப்பு, மன்றத்தின் தலைவரான (பொன்னவைக்கோ) என்னிடமே உள்ளது. இந்த மாநாடு தொடா்பாக முதல்வரைச் சந்தித்து அவரிடம் பேச முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com