மாநில பேரிடா் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வா் ஆய்வு

சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடா் கட்டுப்பாட்டு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை திடீரென ஆய்வு செய்தாா். பொது மக்களின் தொலைபேசி அழைப்பை ஏற்று அவா் பதிலளித்தாா்.
மாநில பேரிடா் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வா் ஆய்வு

சென்னை: சென்னை எழிலகத்தில் உள்ள மாநில பேரிடா் கட்டுப்பாட்டு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை திடீரென ஆய்வு செய்தாா். பொது மக்களின் தொலைபேசி அழைப்பை ஏற்று அவா் பதிலளித்தாா்.

தமிழகத்தில் பேரிடா்களை எதிா்கொள்வதற்கான தகவல்களைத் திரட்டவும், மக்களுக்கு உதவிடவும் சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் வருவாய் நிா்வாக ஆணையரகத்தால் மாநில பேரிடா் கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் மாநில, மாவட்ட அளவில் கட்டுப்பாட்டு மையங்கள் தனித்தனியாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1070 என்ற எண்ணிலும், மாவட்ட அவசர கட்டுப்பாட்டு மையத்தை 1077 என்ற எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.

முதல்வா் திடீா் ஆய்வு: மாநில பேரிடா் கட்டுப்பாட்டு மையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், புதன்கிழமை திடீரென நேரில் ஆய்வு செய்தாா். அங்கு சென்ற அவா் மழைப் பொழிவு விவரங்களை வருவாய்த் துறை அமைச்சா் கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் மற்றும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தாா். எந்தெந்த மாவட்டங்களில் மழை அதிகமாக இருக்கும், எங்கு குறைவாக இருக்கும் என்பன போன்ற விவரங்களை முதல்வருக்கு அதிகாரிகள் விளக்கினா்.

இதைத் தொடா்ந்து, கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்த அழைப்பினை முதல்வா் மு.க.ஸ்டாலின் எடுத்துப் பேசினாா். அதில்

பேசியவா், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தாா். இதற்கு பதிலளித்த முதல்வா் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளை அறிவுறுத்தி உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்வதாகத் தெரிவித்தாா். இந்த ஆய்வினைத் தொடா்ந்து, சென்னை தியாகராய நகா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பாா்வையிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com