ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிவாரண பொருள்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

பெரம்பூர் பல்லவன் சாலை, கே.கே.நகர் அவென்யூ சாலை அருகே மழையால் ஏற்பட்ட பள்ளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக சரி செய்தவற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிவாரண பொருள்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிவாரண பொருள்களை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்துவந்த நிலையில், தற்போது மழை பொழிவு குறைந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில், மழை நீர் தேங்கிய நிலையில், அரசின் நடவடிக்கை காரணமாக அது அப்புறப்படுத்தப்பட்டுவருகிறது. 

இந்நிலையில், தனது சொந்த கொளத்தூர சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஜம்புலிங்கம் மெயின் ரோடு, ஜேஆர் திருமண மண்டபத்தில் நபிகள் நாயகம் தெரு, வெற்றி செல்வி அன்பழகன் நகரில் அமைந்துள்ள எஸ்ஐபி மெமோரியல் டிரஸ்ட் காப்பகத்தைச் சேர்ந்த ஆதரவற்ற குழந்தைகளுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் நிவாரண பொருள்களை வழங்கினார். பின்னர், அவர்களுடன் குழு புகைப்படத்தை எடுத்து கொண்டார்.

பின்னர், எழும்பூர், வில்லிவாக்கம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பாரதி நகர் கிழக்கு ஏரிக்கரை தெரு, சென்னை திருவள்ளூர் நெடுஞ்சாலை, டோபிகானா பகுதிகளில் மழை நீரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருள்களை வழங்கினார். 

முன்னதாக, கொளத்தூர் 70 அடி சாலை, பேப்பர் மில்ஸ் ரோடு, பெரவள்ளூர் பகுதிகளில் மழை நீர் அகற்றும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பெரம்பூர் பல்லவன் சாலை, கே.கே.நகர் அவென்யூ சாலை அருகே மழையால் ஏற்பட்ட பள்ளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து உடனடியாக சரி செய்தவற்கு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com