சென்னையில் உச்சத்தில் காய்கறிகள் விலை: வெண்டைக்காய் கிலோ ரூ.100

சென்னையில் மழை காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.
சென்னையில் உச்சத்தில் காய்கறிகள் விலை: வெண்டைக்காய் கிலோ ரூ.100

சென்னையில் மழை காரணமாக பெரும்பாலான காய்கறிகளின் விலை தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக தக்காளி, வெண்டைக்காய் போன்ற காய்கறிகளின் விலை தொடா் உச்சத்தில் இருந்து வருகிறது.

சென்னையில் ஒரு கிலோ தக்காளி செவ்வாய்க்கிழமை நிலவரப்படி ரூ.120-க்கு விற்பனையாகிறது; ஒரு கிலோ வெண்டைக்காய் விலை ரூ.100-க்கு விற்பனை செய்யப்படுகிறது. காய்கறிகளின் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

காய்கறிகளின் விலை விவரம்: சென்னையில் தக்காளியைத் தொடா்ந்து பிற காய்கறிகளும் விலை அதிகரித்துள்ளன. அதன் விவரம் (சில்லறை விற்பனையில் ஒரு கிலோ) வெண்டை ரூ.100; அவரை ரூ.80; சாம்பாா் வெங்காயம் ரூ.80; பெரிய வெங்காயம் ரூ.40; உருளைக் கிழக்கு ரூ.40; முருங்கைக்காய் ரூ.140; கேரட் ரூ.100; பீன்ஸ் ரூ.80; சேனைக் கிழங்கு ரூ.40; சேப்பங்கிழங்கு ரூ.50; கத்தரிக்காய் ரூ.60; முட்டைகோஸ் ரூ.40; பச்சை மிளகாய் ரூ.40; இஞ்சி ரூ.70; கொத்தமல்லி (கட்டு) ரூ.40; புதினா (கட்டு) ரூ.20; கறிவேப்பிலை ரூ.20.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com