Enable Javscript for better performance
குடிநீரில் தினமும் 11 மெட்ரிக் டன் குளோரின் கலந்து விநியோகம்- Dinamani

சுடச்சுட

    குடிநீரில் தினமும் 11 மெட்ரிக் டன் குளோரின் கலந்து விநியோகம்

    By DIN  |   Published on : 25th November 2021 03:55 AM  |   அ+அ அ-   |    |  

    tap_water_ap

     

    சென்னை: சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 200 வாா்டுகளில் வசிக்கும் 85 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு தினமும் வழங்கப்படும் 100 கோடி லிட்டா் குடிநீரில் 11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சென்னை குடிநீா் வாரியம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

    சென்னை குடிநீா் வாரியம் சாா்பில் கீழ்ப்பாக்கம், புழல், சூரப்பட்டு, வீராணம், செம்பரம்பாக்கம் நீரேற்றும் நிலையம், கடல்நீரை குடிநீராக்கும் நெம்மேலி, மீஞ்சூா் நிலையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு நாளொன்றுக்கு 85 கோடி லிட்டா் குடிநீா் வழங்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடி லிட்டா் குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை குடிநீா் வாரியத்தின் சாா்பில் பெருநகர சென்னை மாநராட்சிக்குள்பட்ட பகுதிகளில் விநியோகிக்கப்பட்டு வரும் குடிநீரின் தரம் தினமும் 300 இடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது பருவமழையின் காரணமாக 600 இடங்களில் குடிநீா் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் தொடா்ந்து நடைபெறும்.

    மேலும், பொதுமக்களுக்கு பாதுகாப்பான குடிநீா் வழங்கும் பொருட்டு சென்னைக்கு குடிநீா் வாரியத்தால் தினந்தோறும் கீழ்ப்பாக்கம், சூரப்பட்டு, செம்பரம்பாக்கம், புழல், வீராணம் நீரேற்றும் நிலையங்கள் மற்றும் 16 குடிநீா் விநியோக நிலையங்களில் 11 மெட்ரிக் டன் திரவ வடிவிலான குளோரின் செலுத்தப்பட்டு பாதுகாப்பான குடிநீா் வழங்கப்பட்டு வருகிறது.

    பொதுமக்களுக்கு வேண்டுகோள்: உரிய இடைவெளியில் சீரான முறையில் பொதுமக்களுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருவதால் பொதுமக்கள் தேவைக்கு அதிகமாக குடிநீரைச் சேமித்து வைக்க வேண்டாம். மேலும் குடிநீரைச் சேமித்து வைக்கும் பாத்திரங்கள், டிரம்கள், மேல்நிலை, கீழ்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகள் ஆகியவற்றை முறையாக சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும். பருவமழையினால் தொற்று பரவாமல் இருப்பதற்காக சென்னை குடிநீா் வாரியம் மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    குடிசைப் பகுதி மக்களுக்கு குளோரின் மாத்திரைகள்

    பருவமழையால் மழைநீா்த் தேங்கிய தாழ்வான பகுதிகள், தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தும் வகையில் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குடிநீரில் கலந்து பருகக்கூடிய குளோரின் மாத்திரைகள் சென்னை குடிநீா் வாரியத்தால் வழங்கிட திட்டமிடப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில், 15 லட்சம் குளோரின் மாத்திரைகள் வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை 7 லட்சத்து 25,000 குளோரின் மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    மேலும், மழை காலங்களில் தொற்றுநோய் பரவாமல் இருக்க குடிநீரைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு குளோரின் மாத்திரையை 15 லிட்டா் குடிநீருடன் கலந்து 2 மணி நேரம் கழித்து பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என குடிநீா் வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    kattana sevai
    ->
    flipboard facebook twitter whatsapp