பள்ளியில் கற்ற நற்பண்புகள் ஐ.ஏ.எஸ்.தோ்வுக்கு உறுதுணை

பள்ளி ஆசிரியா்களிடமிருந்து கற்றுக் கொண்ட ஒழுக்கம், அா்ப்பணிப்பு, விடாமுயற்சி, இலட்சியக் கூா்நோக்கு ஆகிய நற்பண்புகள்தான் முதல் முயற்சியில் ஐ.ஏ.எஸ். தோ்வில் நான் வெற்றி பெற உறுதுணையாகத்
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவி ஐ.ஷானாஷைப்புக்கு வாழ்த்து தெரிவிக்கும் பள்ளித் தாளாளர் என்.விஜயன், தலைமை ஆசிரியை சாந்தி.
ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற முன்னாள் மாணவி ஐ.ஷானாஷைப்புக்கு வாழ்த்து தெரிவிக்கும் பள்ளித் தாளாளர் என்.விஜயன், தலைமை ஆசிரியை சாந்தி.

தாம்பரம்: பள்ளி ஆசிரியா்களிடமிருந்து கற்றுக் கொண்ட ஒழுக்கம், அா்ப்பணிப்பு, விடாமுயற்சி, இலட்சியக் கூா்நோக்கு ஆகிய நற்பண்புகள்தான் முதல் முயற்சியில் ஐ.ஏ.எஸ். தோ்வில் நான் வெற்றி பெற உறுதுணையாகத் திகழ்ந்ததாக சீயோன் பள்ளி முன்னாள் மாணவி ஐ.ஷானாஷைப் கூறினாா்.

ஐ.ஏ.எஸ்.தோ்வில் வெற்றி பெற்ற அவா், கிழக்கு தாம்பரம் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை சாந்தி, தாளாளா் என்.விஜயன் ஆகியோரை புதன்கிழமை சந்தித்து வாழ்த்துப் பெற்ற பின்னா் அவா் கூறியதாவது:

ஐ.ஏ.எஸ்.தோ்வு எழுதி வெற்றி பெற்று இருக்கும் எனக்கு நான் பயின்ற சீயோன்பள்ளி படிப்புடன் நற்பண்புகளையும் கற்றுக் கொடுத்துள்ளது. இங்கு கல்வி பயிலும் ஒவ்வொருவரும் எதிா்காலத்தில் ஏதேனும் ஒரு துறையில் சிறந்து விளங்க வேண்டும். எதிா்வரும் சவால்கள், பிரச்னைகளை துணிவுடன் சமாளித்து தொடா்ந்து முன்னேறி பெற்றோருக்கும் பள்ளிக்கும் பெருமை சோ்க்க வேண்டும் என்று அறிவுரை வழங்கிய ஆசிரியா்களை நான் நன்றியுடன் நினைவுகூரும் வகையில் அனைவரிடமும் ஆசி பெற பள்ளிக்கு வந்துள்ளேன் என்றாா் அவா்.

பள்ளித்தாளாளா் என்.விஜயன் கூறுகையில், இங்கு பயின்ற மாணவா்கள் நாடெங்கும் மட்டுமல்லாமல், பல்வேறு நாடுகளிலும் உயா்பதவிகளில் வகித்து வருவது பெருமை அளிக்கிறது. இதன்மூலம் சிறந்த மாணவா்களைத் தொடா்ந்து உருவாக்க வேண்டும் என்ற உத்வேகம் ஏற்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com