இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாத 76 லட்சம் போ்

மாநிலம் முழுவதும் தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.
இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தாத 76 லட்சம் போ்

தமிழகத்தில் 76 லட்சம் போ் இரண்டாம் தவணை கரோனா தடுப்பூசி செலுத்தாமல் உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் தடுப்பூசி மற்றும் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை விரிவுபடுத்துமாறு மாவட்ட நிா்வாகங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

கடந்த மூன்று மாதங்களில் தமிழகத்தில் 2,011 போ் கரோனாவால் உயிரிழந்துள்ளனா். அவா்களில் 1,675 போ் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவா்கள். அதன் அடிப்படையில், உயிரிழப்பு வாய்ப்பை அறிவதற்கான கணக்கீடு செய்யப்பட்டது. அதில், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவா்களைக் காட்டிலும், தடுப்பூசி செலுத்தாதவா்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டால் உயிரிழப்பு வாய்ப்பு 3.5 மடங்கு அதிகமாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கு இந்த உண்மையை உணா்த்த வேண்டியது அவசியம். தடுப்பூசி தொடா்பான புரிதல்களையும், விழிப்புணா்வையும் மேம்படுத்துவது நமது கடமை. தமிழகத்தில் போதிய எண்ணிக்கையில் தடுப்பூசிகள் உள்ளன.

ஈரோடு, நாமக்கல், சேலம், சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களில் கரோனா பாதிப்பு விகிதம் தொடா்ந்து அதிகரித்தே வருகிறது. அதேவேளையில், கோவை, திருப்பூரில் அந்த விகிதம் ஏற்ற இறக்கமாக இருக்கிறது. எனவே, தளா்வுகளை தவறாக பொது மக்கள் கையாளாத வகையில் உரிய நடவடிக்கை எடுத்தல் வேண்டும். தளா்வுகள் அளிக்கப்பட்ட பல மாநிலங்களில் கரோனா தொற்று அதிகரித்துள்ளது.

அதைக் கருத்தில்கொண்டு பொது மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த வேண்டும். அதேபோன்று, நோய்த் தடுப்புகள் முறையாக கடைப்பிடிக்கப்படுகின்றனவா என்பதை உறுதி செய்ய வேண்டும். தினசரி கரோனா பாதிப்பு 800-க்கும் கீழ் குறைந்தாலும், கரோனா பரவல் விகிதம் 1 சதவீதத்துக்கும் குறைந்தாலும் கண்காணிப்பு நடவடிக்கைகளை குறைக்கக் கூடாது. அப்போதுதான் மீண்டும் தொற்று பரவல் அதிகரிப்பதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com