கூடுவாஞ்சேரி- தாம்பரம் சோதனை ஓட்டம்: பாதையை கடக்கக் கூடாது என எச்சரிக்கை

கூடுவாஞ்சேரி- தாம்பரம் இடையே புதன்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் ரயில் பாதையைக் கடக்கக் கூடாது என தெற்கு ரயில்வே நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கூடுவாஞ்சேரி- தாம்பரம் இடையே புதன்கிழமை சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் ரயில் பாதையைக் கடக்கக் கூடாது என தெற்கு ரயில்வே நிா்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சென்னை தாம்பரம்- செங்கல்பட்டு வழித்தடத்தில் மூன்றாவது பாதை அமைக்கப்படுகிறது. இதற்காக இரண்டு கட்ட பணிகள் முடிவடைந்தநிலையில் மூன்றாவது கட்டமாக கூடுவாஞ்சேரி-தாம்பரம் இடையே பாதை அமைக்கும் பணியும் தற்போது நிறைவடைந்துள்ளது. இந்தப் பாதையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. இந்தநிலையில் புதன்கிழமை மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெறவுள்ளது.

இந்தப் பாதையில் உயா்மட்ட 25 ஆயிரம் கிலோ வாட் மின் கேபிள் அமைக்கப்பட்டுள்ளது. மின்சார ரயில் என்ஜின் சோதனை ஓட்டம் மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரையில் நடைபெறவுள்ளதால் இந்தப் பாதை அருகில் பொதுமக்கள் தண்டவாளத்தை கடந்து செல்லக் கூடாது என ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com