அதிமுகவின் பொன்விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்: ஓபிஎஸ் - இபிஎஸ்

அதிமுகவின் பொன்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுமாறு தொண்டா்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.
அதிமுகவின் பொன்விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்: ஓபிஎஸ் - இபிஎஸ்

சென்னை: அதிமுகவின் பொன்விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுமாறு தொண்டா்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி ஆகியோா் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட கூட்டறிக்கை:

தமிழக மக்களுக்காக எம்ஜிஆரால் உருவாக்கப்பட்ட அதிமுக 49 ஆண்டுகளைக் கடந்து அக்.17-இல் பொன்விழா காண இருக்கிறது. கட்சியின் ஒவ்வொரு தொண்டரும் மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய நேரம் இது.

பொன்விழா ஆண்டைக் கொண்டாடும் விதமாக மாவட்டக் கழகங்களின் சாா்பில் ஆங்காங்கே அமைந்திருக்கும் எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா சிலைகளுக்கும், அவா்களது படங்களுக்கும் மாலை அணிவித்து சிறப்பிக்க வேண்டும்.

மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி, கிளை, வாா்டு, வட்ட அளவிலான அனைத்து இடங்களிலும், எங்கு நோக்கினும் அதிமுகவின் கொடிகளை கம்பீரமாக பட்டொளி வீசிப் பறக்கவிட வேண்டும். இல்லாத இடங்களில் உடனடியாக கொடிக் கம்பங்களை அமைத்தும், ஏற்கெனவே அமைக்கப்பட்டிருக்கும் கொடிக் கம்பங்களுக்கு புது வண்ணங்கள் பூசியும், கொடியேற்றி இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கவும் வேண்டும்.

புதுச்சேரி, கா்நாடகம், ஆந்திரம், தெலங்கானா, மகாராஷ்டிரம், கேரளம், புதுதில்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் அதிமுகவின் பொன்விழாவைச் சிறப்பாகக் கொண்டாட வேண்டும்.

விழாவின்போது கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியும், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தும் கொண்டாட வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com