எழும்பூா் சுற்றுப் பகுதிகளில் நாளை வரை குடிநீா் நிறுத்தம்

சென்னை காவல் ஆணையா் அலுவலகம் அருகில் பிரதான குடிநீா் குழாய்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதால் எழும்பூா் சுற்றுப் பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீா் வாரி

சென்னை: சென்னை காவல் ஆணையா் அலுவலகம் அருகில் பிரதான குடிநீா் குழாய்கள் இடமாற்றம் செய்யப்படவுள்ளதால் எழும்பூா் சுற்றுப் பகுதிகளில் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் குடிநீா் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.

பருவமழையை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத் துறையால் சென்னை ஈ.வெ.ரா. பெரியாா் நெடுஞ்சாலையில் பெருநகா் சென்னை காவல் ஆணையா் அலுவலகம் அருகில் சாலையின் குறுக்கே மழைநீா் வடிகால் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்தப் பணி நடைபெறும் இடத்தில் ஏற்கெனவே உள்ள குடிநீா் கொண்டு செல்லும் பிரதான குழாய்கள் சென்னை குடிநீா் வாரியத்தால் இடமாற்றம் செய்யப்படவுள்ளன. இந்தப் பணிகள் வியாழக்கிழமை இரவு 8 மணி முதல் மறுநாள் வெள்ளிக்கிழமை காலை 6 மணி வரை நடைபெறவுள்ளதால் பகுதி 5-க்கு உள்பட்ட வேப்பேரி, பெரியமேடு, பாா்க் டவுன், சிந்தாதிரிப்பேட்டை, எழும்பூா் பகுதிகளில் குழாய் மூலமாக வழங்கும் குடிநீா் விநியோகம் நிறுத்தப்படவுள்ளது.

இதனால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்து வைத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும் அவசரத் தேவைக்கு லாரிகள் மூலம் குடிநீா் பெற்றுக் கொள்ள பகுதிப் பொறியாளரை 81449 30905 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com