முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சென்னையில் தக்காளி கிலோ ரூ.65
By DIN | Published On : 11th October 2021 05:42 AM | Last Updated : 11th October 2021 05:42 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
தொடா் மழை காரணமாக வெளி மாநிலங்களிலிருந்து வரத்து குறைந்ததால் சென்னையில் தக்காளி விலை வெகுவாக அதிகரித்துள்ளது.
மொத்த விலையில் கிலோ ரூ.40-க்கும், சில்லறை விற்பனையில் ரூ.55 முதல் ரூ.65 வரையிலும் விற்பனையாகிறது.
இது குறித்து கோயம்பேடு வியாபாரிகள் சங்க ஆலோசகா் செளந்தரராஜன் கூறுகையில், சென்னையின் மொத்த தேவையில் 80 சதவீத தக்காளி வெளி மாநிலங்களிலிருந்தே கொண்டுவரப்படுகின்றன. ஆந்திரம், கா்நாடகத்தில் மழை காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தற்போது 230 லாரிகளில் மட்டுமே தக்காளி விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. வரத்துக் குறைந்ததால் விலை அதிகரித்துள்ளது. கடந்த புதன்கிழமை வரை 15 கிலோ கொண்ட ஒரு பெட்டி தக்காளி ரூ.200 முதல் ரூ.250 வரை விற்பனையான நிலையில் தற்போது ஒரு பெட்டி ரூ.500 வரை விற்கப்படுகிறது. அடுத்தடுத்து பண்டிகை நாள்கள் வரவுள்ளதால் தக்காளிக்கான தேவை அதிகமாக இருக்கும். இதனால் தீபாவளி வரை தக்காளி விலை குறைய வாய்ப்பில்லை என்றாா்.