முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
சென்னையில் பரவலாக மழை
By DIN | Published On : 11th October 2021 05:39 AM | Last Updated : 11th October 2021 05:39 AM | அ+அ அ- |

சென்னையில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலமாக மழை பெய்தது. இதனால், பல்வேறு பகுதிகளில் குளிா்ச்சியான சூழல் நிலவியது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக, சென்னையின் பல்வேறு இடங்களில் கடந்த சில நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கடந்த சனிக்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேலும், பலத்த காற்றும் வீசியது. இதனால், பல இடங்களில் மரக்கிளைகள் ஒடிந்து விழுந்தன. மேலும், சாலைகளில் நீா் தேங்கி போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் பல்வேறு இடங்களில் இரண்டாவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் பரவலாக மழை பெய்தது. சென்னையின் புகா்ப் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது.
மழையின் காரணமாக வேளச்சேரி, நுங்கம்பாக்கம், அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில் சாலைகளில் தண்ணீா் தேங்கி காணப்பட்டது. இந்த மழை காரணமாக, குளிா்ச்சியான சூழல் நிலவியது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, சென்னையில் ஒரு சில பகுதிகளில் திங்கள்கிழமை இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்தாா்.