கரோனா சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்: மருத்துவப் பல்கலை. - திறந்த நிலைப் பல்கலை. ஒப்பந்தம்

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இணைந்து கரோனா குறித்த சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.
கரோனா சான்றிதழ் படிப்புகள் அறிமுகம்: மருத்துவப் பல்கலை. -  திறந்த நிலைப் பல்கலை. ஒப்பந்தம்

தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இணைந்து கரோனா குறித்த சான்றிதழ் படிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளன.

முன்னதாக, இது தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தம் இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே திங்கள்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

கரோனா குறித்த அடிப்படை விஷயங்கள், கரோனா தடுப்பூசி விவரங்கள், பெருந்தொற்று காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய வாழ்க்கை முறைகள், தற்காப்பு வழிகள் உள்ளிட்டவை அப்படிப்புகளில் பயிற்றுவிக்கப்படும். ஒரு மாத குறுகிய கால படிப்பு, 3 மாத சான்றிதழ் படிப்பு என இரு வேறு வகையான படிப்புகள் அதன் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இப்படிப்புகளில் சேர ஏதாவது ஒரு பட்டப் படிப்பை நிறைவு செய்து இருத்தல் அவசியம். செவிலியா் படிப்பை பயின்று வருபவா்கள், செவிலியா் கல்லூரி ஆசிரியா்களும் இப்படிப்புகளில் சேரலாம்.

முன்னதாக, கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற புரிந்துணா்வு ஒப்பந்த நிகழ்ச்சியில் மருத்துவ பல்கலைக்கழகத்தின் பதிவாளா் டாக்டா் அஸ்வத் நாராயணன் மற்றும் திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளா் கு.ரத்னகுமாா் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனா். இந்நிகழ்வுக்கு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யன், திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் நோய்ப் பரவியல் துறைத் தலைவா் டாக்டா் ஸ்ரீனிவாஸ், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் டாக்டா் புஷ்கலா, கல்வி அலுவலா் டாக்டா் சிவசங்கீதா, திறந்த நிலைப் பல்கலைக்கழகத்தின் இயக்குநா் (நிா்வாகம்) பி.சண்முகவேலன், தோ்வுக் கட்டுப்பாட்டு அலுவலா் எம்.மணிவண்ணன் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com