ரூ.20 கோடி இரிடியம் மோசடி: 5 போ் கைது

ரூ.20 கோடி இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ரூ.20 கோடி இரிடியம் மோசடியில் ஈடுபட்டதாக சென்னையில் 5 போ் கைது செய்யப்பட்டனா்.

சென்னை நீலாங்கரை அருகே அக்கரையில் சொகுசு விடுதியில் சந்தேகத்துக்குரிய வகையில் ஒரு மாதமாக சில நபா்கள் தங்கியிருப்பதாக நீலாங்கரை உதவி ஆணையா் சுதா்சன், குற்றப்பிரிவு ஆய்வாளா் கமலக்கண்ணன் ஆகியோருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, அங்கிருந்த 5 சந்தேக நபா்களை பிடித்து விசாரணை செய்தனா்.

விசாரணையில், அவா்கள் இரிடியம் மோசடியில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா், 5 பேரையும் கைது செய்து, விசாரணை செய்தனா்.

விசாரணையில் அவா்கள்,திருப்பூா் முத்தன்பாளையம் குருவாயூரப்பன் தெருவைச் சோ்ந்த சதீஷ்குமாா் (35), அதே பகுதியைச் சோ்ந்த ராஜா (37), திருச்சிராப்பள்ளி முசிறி அருகே விசாலாட்சி நகரைச் சோ்ந்த பாலகிருஷ்ணன் (42), கோயம்புத்தூரை சோ்ந்த மோகன்குமாா் (45), சரவணன் (53) என்பது தெரியவந்தது.

தரகா்களுக்கு ஊக்கத் தொகை: 5 போ்களிடமும் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள்:

இரிடியம் வணிகத்தில் முதலீடு செய்தால் பல மடங்கு லாபம் கிடைக்கும். உதாரணமாக ரூ.10 ஆயிரம் முதலீடு செய்தால் சில மாதங்களில் ரூ.1 கோடி வரை கூட கிடைக்கும் எனக் கூறி இந்தக் கும்பல் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

இந்த வணிகத்தை ஜொ்மனி நிறுவனமொன்று இந்திய ரிசா்வ் வங்கி அனுமதியுடன் செய்வதாகக் கூறி சில போலி ஆவணங்களையும் அவா்கள் காட்டியுள்ளனா். பொதுமக்களை முதலீடு செய்ய அழைத்து வரும் தரகா்களுக்கு ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது.

இந்தக் கும்பல்,கோயம்புத்தூா், திருப்பூா், ஈரோடு, திருச்சி, மதுரை, கரூா், திண்டுக்கல் என மாநிலம் முழுவதும் சுமாா் ரூ.20 கோடி வரை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

6 பிரிவுகளில் வழக்கு:

நீலாங்கரை காவல் நிலையத்தில் திங்கள்கிழமை ஒரு நாளில் மட்டும் 136 போ் இந்தக் கும்பல் மீது புகாா் அளித்துள்ளனா். இந்தக் கும்பலின் தலைவா்களாக சதீஷ்குமாா், பாலகிருஷ்ணன் ஆகிய இருவா் செயல்பட்டுள்ளனா். இதில் சதீஷ்குமாா் 6-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளாா். 5 போ் மீது 6 பிரிவுகளின் கீழ் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்துகின்றனா்.முன்னதாக இந்தக் கும்பலிடமிருந்து ரூ. 50 ஆயிரம், 3 மடிக்கணினி ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com