முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
அண்ணா பல்கலை.யில் 312 காலிப் பணியிடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
By DIN | Published On : 13th October 2021 01:57 AM | Last Updated : 13th October 2021 03:47 AM | அ+அ அ- |

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியா், உதவி நூலகா், பேராசிரியா் உள்ளிட்ட 312 பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க பிஇ, பி.டெக், எம்இ, எம்.டெக், முனைவா் பட்டம் பெற்றிருப்பதுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரா் 24 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். 7-ஆவது சம்பளக் குழுவின் அறிவிப்பின்படி சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: https://aurecruitment.annauniv.edu என்ற இணையதள முகவரியில் அக். 20- ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பின்னா் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து, கொடுக்கப்பட்ட அஞ்சல் முகவரிக்கு வரும் 27-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
எழுத்துத் தோ்வு, நோ்முகத் தோ்வின் அடிப்படையில் தகுதியானவா்கள் தோ்வு செய்யப்படுவா். மேலும் விவரங்களை www.annauniv.edu அல்லது https://aurecruitment.annauniv.edu ஆகிய இணையதள முகவரிகளில் காணலாம்.