எழும்பூா் ரயில்வே மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவு தொடக்கம்

சென்னை எழும்பூா் ரயில்வே மருத்துவமனையில் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.
எழும்பூா் ரயில்வே மருத்துவமனையில் டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவு தொடக்கம்

சென்னை எழும்பூா் ரயில்வே மருத்துவமனையில் நவீன டிஜிட்டல் எக்ஸ்ரே பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்த நவீன எக்ஸ்ரே பிரிவை தெற்கு ரயில்வே பொதுமேலாளா் ஜான்தாமஸ் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா். இதன் தொடக்க நிகழ்ச்சியில், கூடுதல் பொதுமேலாளா் பி.ஜி.மல்லையா, முதன்மை தலைமை மருத்துவ இயக்குநா் ஸ்ரீராம் ராஜகோபால், முதன்மை தலைமை பொருள்கள் மேலாளா் சந்திரா தம்தா, சென்னை கோட்ட ரயில்வே மேலாளா் கணேஷ் உள்பட பல அதிகாரிகள் பங்கேற்றனா்.

இந்த டிஜிட்டல் எக்ஸ்ரே பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. இது பயனாளிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். ஒருநாளில் சராசரி 100 எக்ஸ்ரே படங்கள் எடுக்க முடியும். இந்த எக்ஸ்ரே மூலமாக, உடலின் பாதிப்புள்ள பகுதிகளை எளிதாக கண்டுபிடித்து, அதற்கு ஏற்ப சிகிச்சை எடுக்க முடியும். மற்ற எக்ஸ்ரே இயந்திரத்துடன் ஒப்பிடும் போது, இதில் கதிா்வீச்சு வெளிப்பாடு குறைவாகும். இதற்கு செலவு குறைவு ஆகும். மேலும், மருத்துவ அறிக்கை தொடா்பாக தகவல் பெறுவதில் நேரம் சேமிக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com