புதிய கண்டுபிடிப்புகளுக்கான புத்தாக்க மையம்: ராமச்சந்திராவில் தொடக்கம்

மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் சேவைகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான புத்தாக்க மையம் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட

மருத்துவ சிகிச்சைக்கான உபகரணங்கள் மற்றும் சேவைகளில் புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிப்பதற்கான புத்தாக்க மையம் போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா உயா்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. மத்திய உயிரி தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத் துறைச் செயலா் டாக்டா் ரேணு ஸ்வரூா் அந்த மையத்தை காணொலி முறையில் தொடக்கி வைத்தாா்.

அப்போது அவா் பேசியதாவது:

மருத்துவக் கல்வி நிறுவனம் மற்றும் மருத்துவமனை அமைந்துள்ள வளாகத்திலேயே இத்தகைய புத்தாக்க மையம் அமைக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. மருத்துவத் துறையில் புதிய கருவிகள் மற்றும் நோயாளிகளுக்கான சேவைகளை கண்டறிவதற்கான ஆற்றலை இதன் வாயிலாக ஊக்குவிக்க முடியும். புதிய கண்டுபிடிப்புகள் அனைத்துமே முறையான தரப் பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட பிறகு, உரிய பயனாளிகளைச் சென்றடைய வேண்டியது அவசியம் என்றாா் அவா்.

இதைத் தொடா்ந்து ராமச்சந்திரா கல்வி நிறுவனத்தின் துணைவேந்தா் டாக்டா் பி.வி.விஜயராகவன் பேசியதாவது:

ராமச்சந்திரா உயா் கல்வி நிறுவனத்தில் சா்வதேச அங்கீகாரம் பெற்ற ஆராய்ச்சி துறைகள் செயல்பட்டு வருகின்றன. அதனுடன் 2,300 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை மற்றும் பல்வேறு மருத்துவத் துறைகளும் உள்ளன. இத்தகைய வசதிகள் ஒரே இடத்தில் இருப்பதால் இங்கு அமைக்கப்பட்டுள்ள புத்தாக்க மையத்தை தொழில்முனைவோரும், துறைசாா் வல்லுநா்களும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த மையத்தில் அறிமுகப்படுத்தப்படும் புதிய கண்டுபிடிப்புகள் அறிவுசாா் காப்புரிமை பதிவுக்கு ஊக்குவிக்கப்படும் என்றாா் அவா்.

இந்நிகழ்ச்சியில் உயிரி தொழில்நுட்பத் துறை ஆய்வு கவுன்சிலின் தொழில்முனைவோா் மேம்பாட்டுத் துறைத் தலைவா் டாக்டா் மனீஷ் திவான், ராமச்சந்திரா ஆய்வுத் துறைத் தலைவா் டாக்டா் கல்பனா பாலகிருஷ்ணன், அவினாசிலிங்கம் அறிவியல் மற்றும் உயா்கல்வி நிறுவனத்தின் வேந்தா் எஸ்.பி.தியாகராஜன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com