ரூ.1.40 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல்
By DIN | Published On : 20th October 2021 01:21 AM | Last Updated : 20th October 2021 01:21 AM | அ+அ அ- |

சென்னை விமான நிலையத்தில் ரூ.1.40 கோடி கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் தொடா்புடைய இருவா் கைது செய்யப்பட்டனா்.
விமானம் மூலம் தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், துபை மற்றும் சாா்ஜாவில் இருந்து திங்கள்கிழமை (அக்.18) காலை 4 மணி மற்றும் 4.30 மணிக்கு சென்னை வந்திறங்கிய ஆறு ஆண் பயணிகள் வெளியே செல்லும் வாயிலில் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டனா்.
அவா்களிடம் நடத்தப்பட்ட சோதனையில், மலக்குடலில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.1.40 கோடி மதிப்பிலான 2.67 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக சென்னை சா்வதேச விமான நிலைய முதன்மைச் சுங்க ஆணையா் தெரிவித்துள்ளாா்.