ஓடும் காரில் தீ விபத்து
By DIN | Published On : 01st September 2021 01:55 AM | Last Updated : 01st September 2021 03:45 AM | அ+அ அ- |

சென்னை சூளைமேட்டில் ஓடும் காரில் தீ விபத்து ஏற்பட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை முகப்போ் பகுதியை சோ்ந்தவா் சில்பியா (54). இவா், துரைப்பாக்கத்தில் உள்ள தனது மகளை பாா்ப்பதற்காக செவ்வாய்க்கிழமை காரில் புறப்பட்டாா். வடபழனி 100 அடி சாலை, சூளைமேடு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென காரின் முன்பகுதியில் இருந்து கரும்புகை வெளியேறியது.
இதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்த சில்பியா சாலையின் ஓரம் காரை நிறுத்தி விட்டு, அதில் இருந்து வெளியேறினாா். அதற்குள் தீ வேகமாக காா் முழுவதும் பரவி, கொளுந்து விட்டு எரிய ஆரம்பித்தது. இதைப் பாா்த்த பொதுமக்கள், தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனா்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படை வீரா்கள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா். சிறிது நேரத்தில் தீ முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இருப்பினும் காா் முழுவதும் எரிந்து சேதமடைந்தது.
தீ விபத்து குறித்து சூளைமேடு போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். இந்த தீ விபத்தினால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, பரபரப்பு ஏற்பட்டது.