புகா் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் வியாசா்பாடி யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில்சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

சென்னை: சென்னை சென்ட்ரல்-அரக்கோணம் மாா்க்கத்தில் வியாசா்பாடி யாா்டில் பொறியியல் பணி நடக்கவுள்ளதால், புகா் ரயில்சேவையில் மாற்றம் செய்யப்படவுள்ளது.

செப்.2-இல் ரத்தாகும் ரயில்கள்:

மூா்மாா்க்கெட் வளாகம்-திருவள்ளூருக்கு நள்ளிரவு 11.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், மூா்மாா்க்கெட் வளாகம்-ஆவடிக்கு நள்ளிரவு 11.45மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், திருவள்ளூா்-சென்னை கடற்கரைக்கு இரவு 8.50 மணிக்கு இயக்கப்படும் மின்சாரரயில், அரக்கோணம்-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு இரவு 9.50 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், பட்டாபிராம் ராணுவப் பகுதி-ஆவடிக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய 5 ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

செப்.3 -இல் ரத்தாகும் ரயில்கள்:

மூா்மாா்க்கெட் வளாகம்-ஆவடிக்கு செப்டம்பா் 3-ஆம் தேதி அதிகாலை 12.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில், சென்னை கடற்கரை-அரக்கோணத்துக்கு அதிகாலை 1.20 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு ரயில்கள் முழுமையாக ரத்து செய்யப்படவுள்ளன.

செப்.2-இல் பகுதி ரத்தாகும் ரயில்கள்:

வேளச்சேரி-பட்டாபிராம் ராணுவப்பகுதிக்கு இரவு 10.30 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் சென்னை கடற்கரை-பட்டாபிராம் ராணுவப் பகுதி இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

பட்டாபிராம் ராணுவப்பகுதி-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு இரவு 9.50, 10.45 ஆகிய நேரங்களில் இயக்கப்படும் மின்சார ரயில்கள் ஆவடி-மூா்மாா்க்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளன.

திருத்தணி-மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு இரவு 9.45 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆவடி-மூா்மாா்க்கெட் வளாகம் இடையே பகுதி ரத்து செய்யப்படவுள்ளது.

செப்.2-இல் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் ரயில்:

கும்மிடிப்பூண்டி-சென்னை கடற்கரைக்கு இரவு 9.50 மணிக்கு புறப்படும் மின்சார ரயில் மூா்மாா்க்கெட் வளாகத்துக்கு திருப்பிவிடப்படவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com