2 தளங்களுக்கு மேல் இருந்தால் மின்தூக்கி அவசியம்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை தகவல்

இரண்டு தளங்களுக்கு மேல் இருந்தால் மாற்றுத் திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் மின்தூக்கி மேடை அமைக்கப்பட வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 தளங்களுக்கு மேல் இருந்தால் மின்தூக்கி அவசியம்: மாற்றுத் திறனாளிகள் நலத் துறை தகவல்

சென்னை: இரண்டு தளங்களுக்கு மேல் இருந்தால் மாற்றுத் திறனாளிகள் எளிதில் செல்லும் வகையில் மின்தூக்கி அல்லது சாய்தள மேடை அமைக்கப்பட வேண்டுமென மாற்றுத் திறனாளிகள் நலத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப் பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

புதிதாகக் கட்டப்படும் இரண்டு அடுக்குகளுக்கு மேல் கொண்ட அனைத்துக் கட்டடங்களிலும், மின்தூக்கிகள், சாய்தள மேடை, சிறப்பு கழிவறை, பாா்வையற்றோருக்கான அறிவிப்புப் பலகை, தனி வாகன நிறுத்தம் ஆகிய வசதிகளுடன் கட்டப்பட வேண்டியது கட்டாயம். இதற்கான உத்தரவுகள் நகராட்சி நிா்வாகத் துறையால் ஏற்கெனவே வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com