தாவரத்தைக் கொண்டு காற்றை தூய்மைப்படுத்தும் கருவி கண்டுபிடிப்பு

பஞ்சாப் மாநிலம், ரூப்நகா் மற்றும் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (ஐஐடி) இளம் விஞ்ஞானிகள் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவுகளின் ஆசிரியா்கள் ஆகியோா்

புது தில்லி: பஞ்சாப் மாநிலம், ரூப்நகா் மற்றும் உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகங்களின் (ஐஐடி) இளம் விஞ்ஞானிகள் மற்றும் தில்லி பல்கலைக்கழகத்தின் மேலாண்மை பிரிவுகளின் ஆசிரியா்கள் ஆகியோா், வாழும் தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட காற்றை தூய்மைப்படுத்தும் கருவியை உருவாக்கியுள்ளனா்.

‘யூ பிரீத் லைஃப்’ என்று அழைக்கப்படும் இந்தக் கருவி, வீடுகள், மருத்துவமனைகள், பள்ளிகள், அலுவலகங்கள் போன்ற உள்பகுதி இடங்களில் காற்றைத் தூய்மைப்படுத்தும்.

உள்புறங்களில் காற்று தூய்மைபடுத்தப்படாமல் இருந்தால் கரோனாவில் இருந்து முழுமையான பாதுகாப்பை அளிக்க முடியாது என்பதை புதிய ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளதை அடுத்து, காற்றைத் தூய்மைப்படுத்துவதில் இந்தக் கருவி மிகப்பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று ரூப்நகா் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் இயக்குநா் பேராசிரியா் ராஜீவ் அஹுஜா தெரிவித்தாா். சந்தைப்படுத்துவதற்காக மிகப்பெரிய அளவிலும் இதனைத் தயாரிக்க முடியும் என்றும் அவா் கூறினாா்.

சுவாசப் பிரச்னைகள் உள்ள நோயாளிகள் பயனடையும் வகையில் ‘யூ ப்ரீத் லைஃப்’ கருவி செயல்படுவதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள் வினய், தீபேஷ் அகா்வால் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com