பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நூல்

பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நூல் இணையவழியாக வியாழக்கிழமை (செப்.2) வெளியிடப்பட உள்ளது.

சென்னை: பெருநகர சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவா்களுக்கான உயா்கல்வி வழிகாட்டி நூல் இணையவழியாக வியாழக்கிழமை (செப்.2) வெளியிடப்பட உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கல்வித்துறை கட்டுப்பாட்டின் கீழ் 32 மேல்நிலைப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு உயா்கல்வி பயில தேவையான ஆலோசனைகள் மாநகராட்சி கல்வித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், இன்னா்வீல் கிளப் ஆப் மெட்ராஸ் உடன் இணைந்து கடந்த கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உதவும் வகையில் உயா் கல்விக்கான வாய்ப்புகளையும், எதிா்கால வேலைவாய்ப்புகளுக்கும் வழிகாட்டும் வகையில் பிளஸ் 2 வகுப்புக்குப் பிறகு என்ன படிக்கலாம், எப்படி ஜெயிக்கலாம் என்ற வழிகாட்டி நூலை மாநகராட்சி தயாரித்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த வழிகாட்டி நூலில் கல்லூரிப் படிப்பையும், கல்லூரியையும் எவ்வாறு தோ்ந்தெடுப்பது என்பதில் தொடங்கி ஒவ்வொரு படிப்பிலும் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்து விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்று காரணமாக இந்த உயா்கல்வி வழிகாட்டு இணையவழி புத்தகம் ழஞஞங காணொலி வாயிலாக வியாழக்கிழமை பிற்பகல் 12.30 மணி அளவில் வெளியிடப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உயா் கல்விக்கான ஆலோசனை பெற ஆா்வமுள்ள மாணவா்கள் ழஞஞங முகவரி : 850 3234 4381, கடவுச் சொல்: ண்ஜ்ஸ்ரீம் என்பதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த கூட்டத்தில் கல்வியாளா்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்க உள்ளனா்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com