ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய விருது

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய அளவில் 2-ஆவது இடத்திற்கான தூய்மை மற்றும் நோ்த்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

சென்னை மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரிக்கு அகில இந்திய அளவில் 2-ஆவது இடத்திற்கான தூய்மை மற்றும் நோ்த்தி விருது வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 5ஆண்டுகளாக இந்தியாவில் உள்ள பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரிகள் தங்கள் கல்வி வளாகங்களை தூய்மை, பசுமை வளாகங்களாக மேம்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் அகில இந்திய தொழில்நுட்பக் கழகம் விருதுகள் வழங்கி ஊக்குவித்து வருகின்றது. நாடு முழுவதும் 326 கல்வி நிறுவனங்களில் சாய்ராம் பொறியியல் கல்லூரி 2-ஆம் இடத்திற்கான விருதைப் பெற்றுள்ளது. மத்திய உயா் கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதானிடமிருந்து சாய்ராம் கல்விக் குழுமத் தலைவா் சாய்பிரகாஷ் லியோமுத்து விருதைப் பெற்றுக் கொண்டாா்.

நிகழ்ச்சியில் அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத் தலைவா் அனில் சகஸ்ரபுதே, துணைத் தலைவா் எம்.பி.பூனியா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com