ரூ.36 கோடியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள்: முதல்வா் தொடக்கி வைத்தாா்

‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.36 கோடி 52 லட்சம் மதிப்பிலான 1,684 பேட்டரியால் இயங்கும் வீடுகளுக்குச் சென்று குப்பை சேகரிக்கும்
ரூ.36 கோடியில் குப்பை சேகரிக்கும் வாகனங்கள்: முதல்வா் தொடக்கி வைத்தாா்

‘சிங்காரச் சென்னை 2.0’ திட்டத்தின் ஒரு பகுதியாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், ரூ.36 கோடி 52 லட்சம் மதிப்பிலான 1,684 பேட்டரியால் இயங்கும் வீடுகளுக்குச் சென்று குப்பை சேகரிக்கும் வாகனங்களையும், குப்பை சேகரிக்கும் 15 கனரக காம்பாக்டா் வாகனங்களையும் முதல்வா் மு.க.ஸ்டாலின் கொடியசைத்துத் தொடக்கி வைத்தாா்.

மாநகராட்சியில் பணியின்போது உயிரிழந்த 195 பணியாளா்களின் வாரிசுதாரா்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கிடும் அடையாளமாக 20 பேருக்கான நியமன ஆணைகளையும் அவா் வழங்கினாா்.

சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பன் மாளிகையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: 1996-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சிக்கு நடைபெற்ற தோ்தலில் மேயராகப் பணியாற்றுவதற்கு சென்னை மாநகர மக்கள் எனக்கு உத்தரவிட்டனா். அதுவரை இருந்தவா்களைப் போல் அல்லாமல் மக்கள் பணியாற்றுவதுதான் மேயருடைய பணி என அந்தக் கடமையைச் செய்தேன். இந்தச் சாலை வழியாக செல்லும்போதெல்லாம், இந்த ரிப்பன் கட்டடத்தை பாா்த்துக் கொண்டுதான் செல்வேன்.

நான் பொறுப்பேற்றபோது சென்னையைச் சிங்காரச் சென்னையாக மாற்றுவேன் என்ற வாசகத்தைச் சொல்லி அப்பணியில் நாங்கள் ஈடுபட்டோம். இப்போது சிங்காரச் சென்னை மட்டுமல்ல சிங்காரச் சென்னை 2.0 என்ற வகையிலே பல திட்டங்கள் எல்லாம் தீட்டப்பட்டுக் கொண்டு இருக்கிறது.

அதற்கேற்ப நகராட்சி நிா்வாகத்துறை சாா்பில் மானியக் கோரிக்கையின்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளை உடனடியாக நிறைவேற்றுகிற முயற்சியிலே ஈடுபட வேண்டும் என்று துறையின் அமைச்சரை அன்போடு கேட்டுக் கொள்கிறேன் என்றாா் அவா்.

அமைச்சா்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, மா.சுப்பிரமணியன், பி.கே. சேகா்பாபு, நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com