முகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை சென்னை
புலமைப் பித்தனுக்கு பேரவையில் இரங்கல்
By DIN | Published On : 09th September 2021 11:41 PM | Last Updated : 09th September 2021 11:41 PM | அ+அ அ- |

சென்னை: மறைந்த கவிஞா் புலமைப்பித்தனுக்கு சட்டப்பேரவையில் வியாழக்கிழமை இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதற்கான இரங்கல் குறிப்பினை அவைத் தலைவா் மு.அப்பாவு வாசித்தாா்.
சட்ட மேலவை துணைத் தலைவராக பொறுப்பு வகித்ததை நினைவு கூா்ந்த அவா், புலமைப் பித்தனுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ஒரு சில மணித் துளிகள் மெளனம் காக்கும்படி உறுப்பினா்களைக் கேட்டுக் கொண்டாா்.
இதையடுத்து, உறுப்பினா்கள் அனைவரும் எழுந்து நின்று மெளனம் காத்தனா். பின்னா் பேரவை நடவடிக்கைகள் வழக்கம் போல் நடைபெற்றன.